Published:Updated:

தேனி: `வங்கியில் எடுக்கப்பட்ட ரூ. 22 லட்சம்’ -தனியார் நிறுவன மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட அருண்குமார்
கொலை செய்யப்பட்ட அருண்குமார்

தேனியைச் சேர்ந்த நபர், வங்கியில் பணம் எடுத்துவிட்டு திரும்பும் வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

தேனி மகேந்திரா இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர் அருண்குமார் (வயது 34). தேனி பென்னிகுவிக் நகரில் வசித்துவருகிறார். இந்த நிலையில், நேற்று காலை விற்பனை நிலையத்திற்கு வந்த அருண்குமார், 11 மணிக்கு விற்பனை நிலைய உரிமையாளர் சன்னாசி அறிவுறுத்தலின் பேரில், பெத்தாச்சி விநாயகர் கோயில் அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

ரூ.22 லட்சம், வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த அருண்குமார், மதியம் கடந்த பின்னரும், விற்பனை நிலையம் வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விற்பனை நிலைய உரிமையாளர் சன்னாசி, தேனி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸார், அருண்குமாரின் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்யும் தேனி எஸ்.பி
கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்யும் தேனி எஸ்.பி

தேனி பைபாஸ் சாலையில் அருண்குமாரின் மொபைல் எண்ணின் சிக்னல் துண்டிக்கப்பட்டது தெரியவரவே, பைபாஸ் சாலையில் போலீஸார் ஆய்வு செய்தனர். சாலையிலிருந்து அப்போது, அருண்குமாரின் இருசக்கர வாகனமும், அதன் அருகே, தலையில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக அருண்குமாரும் கிடந்துள்ளார். அவரது அருகே ரத்தக்கறை படிந்த சுத்தியல் மற்றும் மதுபாட்டில் கிடந்துள்ளது.

கட்டப் பஞ்சாயத்து..கடத்தல்! - தேனி பேராசிரியருக்கு 3 மாதங்களாக நடந்த கொடுமை

சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த தேனி காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். அருண்குமாரிடம் பணத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு அவரைப் பின் தொடர்ந்துவந்து வழிப்பறி செய்து கொலை செய்தனரா அல்லது அருண்குமாருக்குத் தெரிந்த நபர்களே இதைச் செய்தனரா என விசாரணை செய்துவருகிறார்கள் தேனி போலீஸார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், இதே இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்த கலைவாணன் என்பவர் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்கக் கோரி அவரின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் விளைவாக, தற்போது தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் கலைவாணனை தேடி வருகிறார்கள். பல ஆண்டுகளாக தேடியும் இன்னும் கலைவாணன் என்ன ஆனார் எனத் தெரியாத நிலையில், தற்போது அருண்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு