Published:Updated:

பொன்னேரி: தனியார் பள்ளி விடுதி மாணவி உடல்நலக் குறைவால் திடீர் மரணம்! - போலீஸ் விசாரணை

மரணம் ( சித்திரிப்புப் படம் )

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு உபாதைகளால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

பொன்னேரி: தனியார் பள்ளி விடுதி மாணவி உடல்நலக் குறைவால் திடீர் மரணம்! - போலீஸ் விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு உபாதைகளால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள ஆண்டார் குப்பத்தில் பிரபல தனியார்ப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவாரூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு உபாதைகளால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவி

மாணவியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, நேற்றைய தினம் பள்ளி நிர்வாகத்தினர் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் மாணவி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

அதையடுத்து, கவரப்பேட்டை போலீஸார் மாணவியின் உடலை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். தொடர்ந்து மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.