Published:Updated:

'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' உதவி பயிற்சியாளர் தற்கொலை - பி.டி.உஷா எம்.பி சொல்வது என்ன?

உதவி பயிற்சியாளர் தற்கொலை

உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளர்களும், மாணவர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஏற்கெனவே தகவல் கசிந்த நிலையில், உதவி பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' உதவி பயிற்சியாளர் தற்கொலை - பி.டி.உஷா எம்.பி சொல்வது என்ன?

உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளர்களும், மாணவர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஏற்கெனவே தகவல் கசிந்த நிலையில், உதவி பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
உதவி பயிற்சியாளர் தற்கொலை

பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா கேரள மாநிலம், கோழிக்கோடு அருகேயுள்ள பாலுசேரி பகுதியில் 'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' என்ற பெயரில் தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்திவருகிறார். இங்கு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்சிபெற்றுவருகின்றனர். பயிற்சியாளர்களும், பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளும் தங்குவதற்காகப் பயிற்சிப் பள்ளி அருகே தங்கும் விடுதியும் இருக்கிறது. 'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' பயிற்சிப் பள்ளியில் உதவி பயிற்சியாளராக கோவையைச் சேர்ந்த ஜெயந்தி (26) கடந்த ஒன்றரை ஆண்டாகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் பயிற்சிக்கு அழைப்பதற்காக சில மாணவிகள் ஜெயந்தியின் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' பயிற்சி பள்ளி
உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' பயிற்சி பள்ளி

இது பற்றி பாலுசேரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவரின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயந்தியின் மொபைல் போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த ஜெயந்தி, 2016-ல் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் சாதனை படைத்திருக்கிறார். பி.டி.உஷா மேல்சபை எம்.பி-யாகப் பொறுப்பேற்ற சமயத்தில் பயிற்சிப்பள்ளியின் பொறுப்புகளை ஜெயந்தி முன்னின்று கவனித்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில் அவரின் மரணம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக பி.டி.உஷா தெரிவித்திருக்கிறார். இது பற்றிப் பேசிய பி.டி.உஷா, "கடந்த இரண்டு மாதங்களாக ஜெயந்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பயிற்சிபெறும் குழந்தைகளிடமிருந்து நல்ல ரிசல்ட் கிடைத்தது. இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பு அவரின் போட்டோ செய்தித்தாள்களில் வந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவர் இப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் பர்சனல் விஷயங்களில் நான் தலையிடுவது இல்லை. முந்தின நாள் இரவு வரை பயிற்சி குறித்து அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரின் பர்சனல் விஷயங்கள் குறித்து யாரிடமும் பகிர்ந்ததில்லை" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா எம்.பி
செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா எம்.பி

இது ஒருபுறமிருக்க உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளர்களும், மாணவர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஏற்கெனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் உதவி பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு அது போன்ற காரணங்கள் இருக்கின்றனவா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.