Published:Updated:

நெல்லை: பழிக்குப் பழியாகத் தொடரும் கொடூரக் கொலைகள்! - அச்சத்தில் பொதுமக்கள்

கொலை நடந்த இடத்தில் எஸ்.பி மணிவண்ணன்
கொலை நடந்த இடத்தில் எஸ்.பி மணிவண்ணன்

நெல்லையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், கோபாலசமுத்திரம் பகுதியிலுள்ள குளத்தின் அருகில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு கிடந்த உடலைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்ட மாரியப்பன்
பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்ட மாரியப்பன்

கொலையானவரின் கை கால் துண்டிக்கப்பட்டதுடன், அவரது தலையையும் கொலையாளிகள் அறுத்து எடுத்திருக்கிறார்கள். பின்னர் தலையைச் சற்று தூரம் தூக்கிச் சென்ற கொலையாளிகள் அதைக் குளத்தின் அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரத் தேடலுக்குப் பின்னர் கொலையானவரின் தலையை போலீஸார் மீட்டனர்.

கொலையானவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்த போலீஸார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினவ், எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள்.

கொலை நடந்த இடத்தில் கிடந்த பைக்
கொலை நடந்த இடத்தில் கிடந்த பைக்

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பதும், அவர் விவசாயப் பணிகளுக்கு இயந்திரம் அனுப்பும் புரோக்கர் வேலை செய்ததும் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

வழக்கம்போல, விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாலையில் வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்ற அவரை கோபாலசமுத்திரம் குளத்தின் கரையில் சென்றபோது வழிமறித்த மர்மக் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியிருக்கிறது. முதலில் கையில் வெட்டியதும், கை துண்டானதால் அவர் தடுமாறியிருக்கிறார்.

நெல்லை: குடிபோதை; கிணற்றுக்குள் தள்ளி கொலை! - மதுவால் நண்பனுக்கு ஏற்பட்ட சோகம்!

பைக்கை ஓட்ட முடியாமல் கீழே விழுந்த அவர் எழுந்து ஓட முயன்றபோது அவரது காலில் வெட்டியிருக்கிறார்கள். அதன் பின்னர் கொடூரமாக அவரை வெட்டிக் கொன்ற அந்தக் கும்பல் அவரது கழுத்தை அறுத்து தலையைத் துண்டாக்கியதுடன், அதை எடுத்துச் சென்றிருக்கிறது. சிறிது தூரத்துக்குத் தலையுடன் சென்ற கும்பல் பின்னர் குளத்தின் கரையில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது.

இதற்கிடையே, கோபாலசமுத்திரம் அருகே நேற்று சங்கர சுப்பிரமணியன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் அவரை வெட்டிய கும்பல் தலையைத் துண்டித்தது.

சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய்
சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய்

சங்கர சுப்பிரமணியன் நேற்று கொலை செய்யப்பட்டதற்குப் பழிதீர்க்கும் வகையில் இன்று மாரியப்பன் என்பவரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், கொலையான மாரியப்பன் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவருக்கு எந்தக் குற்றச் செயலிலும் தொடர்பு கிடையாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கோபாலசமுத்திரம் கிராமத்தினர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட மாரியப்பன் அப்பாவி. அவர் எந்த குற்றச் சம்பவத்திலும் ஈடுபட்டவர் இல்லை. 35 வயது நிரம்பிய அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளை இனி மாரியப்பனின் மனைவி எப்படி வளர்ப்பாரோ...” என்று வருத்தப்பட்டார்கள்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பழிக்குப் பழியாக நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் சாதிப் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு