Published:Updated:

துபாயிலிருந்து வந்தவர்... பணத்துக்காக மும்பை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு கடத்திய கும்பல்!

கடத்தப்பட்ட சங்கர்

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த நபர் ஒருவர் பணத்துக்காக புதுச்சேரிக்குக் கடத்தப்பட்டார். ஒரு வாரத் தேடுதலுக்குப் பிறகு புதுச்சேரியில் அவர் மீட்கப்பட்டார்.

துபாயிலிருந்து வந்தவர்... பணத்துக்காக மும்பை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு கடத்திய கும்பல்!

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த நபர் ஒருவர் பணத்துக்காக புதுச்சேரிக்குக் கடத்தப்பட்டார். ஒரு வாரத் தேடுதலுக்குப் பிறகு புதுச்சேரியில் அவர் மீட்கப்பட்டார்.

Published:Updated:
கடத்தப்பட்ட சங்கர்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் (47) என்பவர் துபாயில் வேலை செய்துவந்தார். அவர் கடந்த 22-ம் தேதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து பஸ் மூலம் தெலங்கானா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அவர் தெலங்கானாவுக்குச் செல்லவில்லை. இதனால் அவருடைய மகன் ஹரீஷ் சந்தேகப்பட்டு மும்பைக்கு வந்து சங்கர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த டிராவல் ஏஜென்சிக்குச் சென்று விசாரித்தபோது, சங்கர் வேறு ஒருவருடன் வந்து முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் எங்கு சென்றார் என்பது குறித்து ஹரீஷ் தேட ஆரம்பித்தார். இதற்கிடையே திடீரென கடந்த 24-ம் தேதி சங்கர் தன் மகனுக்கு போன் செய்து தான் மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

சங்கர்
சங்கர்

மேற்கொண்டு எந்தத் தகவலையும் கேட்கும் முன்பு போனை வைத்துவிட்டார். இதனால் ஹரீஷ் மும்பை போலீஸில் இது குறித்துத் தெரிவித்து புகார் செய்தார். அதோடு கடந்த 28-ம் தேதி மர்ம நம்பரிலிருந்து ஹரீஷுக்கு போன் அழைப்புகள் வந்தன. அதில் சங்கரை விடுவிக்க வேண்டுமானால் 15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மர்ம நபர் கேட்டார். இதையடுத்து ஹரீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கடத்தல் புகாராகப் பதிவுசெய்தனர். போலீஸார் போன் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் திருச்சியில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து தனிப்படை போலீஸார் திருச்சிக்குச் சென்று தேட ஆரம்பித்தனர். அதற்குள் கடத்தல்காரர்கள் சங்கரை புதுச்சேரிக்கு மாற்றிவிட்டனர். திருச்சியில் கடத்தல்காரர்களின் உறவினர்கள் சிலரைப் பிடித்து விசாரித்தனர். கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் போனையும் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். திடீரென கடத்தல்காரர்கள் போலீஸாரைத் தொடர்புகொண்டு சங்கர் இருக்கும் இடத்தை தெரிவித்தனர். சங்கரை காரைக்காலில் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடிப்பது மும்பை போலீஸாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. உள்ளூர் போலீஸாரின் துணையோடு சங்கரைக் கண்டுபிடித்தனர். சங்கர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடத்தல்
கடத்தல்
representational image

கடத்தல்காரர்களின் உறவினர்களைத் தொடர்புகொண்டவுடன் அவர்கள் பயத்தில் சங்கரை விட்டுவிட்டுத் தப்பி சென்றனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தெரிவித்தார். சங்கரைக் கடத்திய இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர். சங்கர் துபாயிலிருந்து வரும்போது 11 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் வந்திருக்கிறார். அவருடன் விமானத்தில் வந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவரிடம் சங்கர் தான் துபாயில் சம்பாதித்தது குறித்து தெரிவித்திருக்கிறார். அதைப் பறிக்கும் நோக்கில் அவரை மும்பையிலிருந்து திருச்சிக்குக் கடத்தியிருக்கிறார்கள். மும்பை போலீஸார் ஒரு வாரம் புதுச்சேரியில் தங்கியிருந்து சங்கரை மீட்டுள்ளனர்.