Published:Updated:

`நாட்டு வெடிகுண்டு.. தலைக்கு மட்டுமே குறி' -புதுவை அமைச்சரின் ஆதரவாளருக்கு நேர்ந்த கொடூரம்

அமைச்சரின் ஆதரவாளர் சாம்பசிவம்
News
அமைச்சரின் ஆதரவாளர் சாம்பசிவம்

தனது தங்கையின் திருமண விழாவுக்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்குக் கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார், சாம்பசிவம்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம். காங்கிரஸ் பிரமுகரான இவர் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர். அமைச்சரின் பிறந்தநாள் விழாவை இன்று கிருமாம்பாக்கத்தில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அத்துடன் தனது தங்கையின் திருமண விழாவுக்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்குக் கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்.

அதன்படி, இன்று காலை தனது உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காகக் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருமாம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சாம்பசிவத்தின் கார்மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.

சடலமாக சாம்பசிவம்
சடலமாக சாம்பசிவம்

அதில், நிலை தடுமாறிய சாம்பசிவம் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோட முயற்சி செய்தார். அப்போது அந்தக் கும்பல் அவர் மீது மீண்டும் நாட்டு வெடிகுண்டை வீசியதால் தடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அரிவாள்களுடன் அவரைச் சுற்றி வளைத்த கும்பல், சாம்பசிவத்தின் தலையை மட்டும் குறி வைத்துத் தாக்கியது.

அதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சாம்பசிவம். அப்போது அந்த வழியே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த குழந்தைகளும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் ஒருவரை வெட்டிச் சாய்த்துவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின்பே சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றது அந்தக் கும்பல். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சாம்பசிவத்தின் உறவினர்கள், சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி

காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து சாம்பசிவத்தின் சடலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னாள் கவுன்சிலரும் அமைச்சர் கந்தசாமியின் பி.ஏ-வுமான வீரப்பன் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்று படுகொலை செய்யப்பட்டார். தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் சாம்பசிவம் வீரப்பனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.