Published:Updated:

புதுச்சேரி: மது போதையில் தனியார் விடுதியில் தகராறு - டாடி ஆறுமுகத்தின் மகனைத் தேடும் போலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`டாடி’ ஆறுமுகத்துடன் அவர் மகன் கோபிநாத்
`டாடி’ ஆறுமுகத்துடன் அவர் மகன் கோபிநாத்

மது போதையில் நட்சத்திர உணவகத்தில் தகராறு செய்ததுடன், அங்கு பணியாற்றிய ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தைத் தேடிவருகிறது புதுச்சேரி போலீஸ்.

யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் `டாடி’ ஆறுமுகம். இவருக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அசைவ உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவர் மகன் கோபிநாத், தன் சித்தப்பா மகன்கள் ஜெயராம், தாமு உள்ளிட்ட நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் நட்சத்திர விடுதியில் மது அருந்தியிருக்கிறார். அப்போது மது போதையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களை கோபிநாத்தும் அவர் நண்பர்களும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

`டாடி’ ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்
`டாடி’ ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்
மன்னார்குடி: புதுச்சேரி மது பாட்டிலில், கள்ளச்சாராயம் விற்பனை! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

ஒருகட்டத்தில், மது அருந்த அரசு அனுமதித்திருக்கும் நேரமான இரவு 11 மணியைத் தாண்டிய பிறகும் அங்கிருந்த ஊழியர்களிடம் மது கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள். ஆனால் 11 மணிக்கு மேல் மது கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் அங்கிருந்த ஊழியர் ஜார்ஜ் சினாஸ். போதை தலைக்கேறிய நிலையிலிருந்த கோபிநாத்தும், அவர் உடனிருந்தவர்களும் ஊழியர் ஜார்ஜ் சினாஸை பீர் பாட்டிலால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராமன்
கைதுசெய்யப்பட்ட டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராமன்

அதேபோல, உணவகத்திலிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன், சாலையில் நின்றும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தியால்பேட்டை போலீஸார் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது போலீஸாரை அவர்கள் தாக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு, அவர்களைக் கைதுசெய்து அழைத்துச் செல்ல போலீஸார் முயன்றபோது, டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தும் அவருடன் வந்திருந்த மற்றொரு நபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதையடுத்து அங்கிருந்த டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம், அவர் நண்பர் தாமு ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார், ஊழியர் ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

கைது
கைது
கரூர்: 'யூ-டியூப் ரெஃபெரென்ஸ்; குக்கரில் சாராயம்! - தந்தை, மகனை வளைத்த போலீஸ்!'

தொடர்ந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டதுடன், உணவகத்தின் ஊழியரைத் தாக்கிவிட்டு போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபியையும், அவர் நண்பரையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு