Published:Updated:

இரண்டாவது திருமணம்; பெண் தர மறுத்த அண்ணனுக்கு ஸ்கெட்ச்! - வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரெளடிகள்

கைது ( சித்தரிப்புப் படம் )

தனது இரண்டாவது திருமணத்துக்குப் பெண் தர மறுத்தவரைக் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்ற ரெளடியை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

இரண்டாவது திருமணம்; பெண் தர மறுத்த அண்ணனுக்கு ஸ்கெட்ச்! - வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரெளடிகள்

தனது இரண்டாவது திருமணத்துக்குப் பெண் தர மறுத்தவரைக் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்ற ரெளடியை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

Published:Updated:
கைது ( சித்தரிப்புப் படம் )

புதுச்சேரி, காராமணிக்குப்பம் ரயில்வே தண்டவாளம் அருகில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி சிலர் பதுங்கியிருக்கிறார்கள் என்று உருளையன்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று சென்றது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீஸார் உடனே அந்த இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோடியது. அப்போது அவர்கள் கையிலிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

கைதுசெய்யபபட்ட குற்றவாளிகள்
கைதுசெய்யபபட்ட குற்றவாளிகள்

ரயில்வே தண்டவாளத்தில் வெடித்துச் சிதறிய நாட்டு வெடிகுண்டின் துகள்கள் கிடந்தன. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டைப் பதுக்கிவைத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பத்திரமாகச் சேகரித்தனர். அதன் பிறகு மணல், மரத்தூள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியில் நாட்டு வெடிகுண்டை வைத்து பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா எனத் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய உருளையன்பேட்டை போலீஸார், தப்பியோடிய புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான ரெளடி ரிஷிகுமார், பெரியார் நகரை சேர்ந்த கவுதம், அரவிந்த், கவியரசன் உள்ளிட்ட நான்குல் பேரைக் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மூன்று நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

குற்றவாளிகளுடன் போலீஸார்
குற்றவாளிகளுடன் போலீஸார்

கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடி ரிஷிகுமாரும், ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஏற்கெனவே காதலித்துவந்திருக்கிறார்கள். ஆனால் ரிஷிக்குமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொண்ட அந்தப் பெண், ரிஷிகுமாரைவிட்டு விலகிவிட்டார். அதன் பிறகு ரிஷிகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றனர். அதையடுத்து ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்தப் பெண், ரிஷிகுமார் கொடுக்கும் தொல்லை குறித்து தனது அண்ணனிடம் கூறியிருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் அண்ணனைச் சந்தித்த ரிஷிகுமார், ’உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடு. நான் நல்லா பார்த்துக்குவேன்’ என்று கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரிஷிகுமாரை கத்தியால் வெட்டியிருக்கிறார் அந்தப் பெண்ணின் அண்ணன். அதில் தலையில் காயம் ஏற்பட்டதால் அங்கிருந்து ரிஷிகுமார் தப்பித்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் திருப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த ரிஷிகுமாரின் நண்பர் வீரா என்பவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். அப்போது வீரா மற்றும் நண்பர்கள் இணைந்து அந்தப் பெண்ணின் அண்ணனைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதன்படி புதுவை வனத்துறை பின்புறம் இருக்கும் புதர் மறைவில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்திருக்கின்றனர். அதன்பிறகு 3 குண்டுகளை அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு, இரண்டு குண்டுகளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் திட்டத்தை அரங்கேற்றச் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். மேலும் தப்பித்து தலைமறைவாக இருக்கும் வீரா என்பவரையும் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism