Published:Updated:

`அரசு ரூ.7 லட்சம் கொடுக்கணும்; 68 வயதுக்காரருக்கு வாழ்நாள் சிறை!' - பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டை அருகே 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் அசரப் அலி (68). இவர் கடந்த 03.09.2018-ல் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் அசரப் அலியை கைது செய்தனர். இந்த வழக்கானது, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில்தான் தற்போது நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி, '7 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடாக அரசு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

`சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும், இதுபோன்ற குற்றங்களுக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.