Published:Updated:

`காவல்நிலையத்தில் கையொப்பமிட்ட அடுத்த நொடி!' -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த டிக் டாக் இளைஞர்கள்

டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்
டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

"எத்தனைமுறை உள்ள போயிட்டு வந்தாலும், சுதந்திரப் போராட்டத்துக்கு போயிட்டு வர்றதப் போல தோரணையாத்தான் வருவாப்ல" என்ற அடைமொழியுடன் அந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி போலீஸார் கடந்த வாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளாள விடுதியைச் சேர்ந்த பாலையா(19) என்ற இளைஞர் ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனால், அவரது வாகனத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், அவரது வாகனத்தை அவரிடமே கொடுக்கும் வகையில் போலீஸார், பாலையாவிடம், ஜாமீன் கையொப்பம் போடுவதற்கு இருவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வரக்கூறியுள்ளனர். அதன்படி, பாலையா, தனது நண்பர்கள் மகேந்திரன், வெற்றிவேல் ஆகியோரை அழைத்துச் சென்றார். இருவரும் சேர்ந்து ஜாமீன் கையொப்பம் போட்டுவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது, வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை எடுத்து அதை சமூகவலைதளங்களில் உலாவ விட்டுள்ளார். டிக் டாக் பிரியரான மகேந்திரன் அந்த வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பாலையா காவல் நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். காவல் நிலையத்தைக் காட்டுகின்றனர்.

`காவல்நிலையத்தில் கையொப்பமிட்ட அடுத்த நொடி!' -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த டிக் டாக் இளைஞர்கள்

வெளியே வரும்போது, ``செய்முறை வாங்குறதுக்காக, அடிக்கடி ஜெயிலுக்குப் போயிட்டு வர்றாப்ல, எத்தனைவாட்டம் உள்ள போயிட்டு வந்தாலும், சுதந்திரப் போராட்டத்துக்குப் போயிட்டு வர்றதப் போல தோரணையாகத்தான் வருவாப்ல" என்ற அடைமொழியுடன் அந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

`பூனை, அணிலை சித்ரவதை செய்து டிக் டாக் வீடியோ' - விபரீத இளைஞரை வளைத்த நெல்லை போலீஸ்

இந்த நிலையில், காவல் நிலையத்தைத் தவறாகச் சித்திரித்துச் டிக்டாக் வீடியோ வெளியிட்டதற்காக வெற்றிவேல் மற்றும் மகேந்திரனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக டிக் டாக் எடுக்கவில்லை, நிறைய லைக்ஸ் கிடைக்கும் என்றுதான் எடுத்தோம் என்கின்றனர். தற்போது உள்ள இளைஞர்கள் பலரும் டிக் டாக் மோகத்தில் வாழ்க்கையே தொலைத்து வருகின்றனர். குறிப்பாக, டிக் டாக்கால் தினம் தினம் ஏதோ ஒரு வகையில் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இளைஞர்கள் டிக் டாக் மோகத்தைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான விஷயங்களைச் சிந்திக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு