Published:Updated:

புதுக்கோட்டை: சாதிமறுப்பு திருமணம்; ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - விடிவுகாலம் எப்போது?!

நல்லூர்

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள், எங்களுடன் நெருக்கமாக இருந்த என ஊரில் 28 குடும்பங்களை சுப, துக்க நிகழ்ச்சிகள் என அனைத்து விஷயங்களிலும் ஒதுக்கியே வைத்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை: சாதிமறுப்பு திருமணம்; ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - விடிவுகாலம் எப்போது?!

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள், எங்களுடன் நெருக்கமாக இருந்த என ஊரில் 28 குடும்பங்களை சுப, துக்க நிகழ்ச்சிகள் என அனைத்து விஷயங்களிலும் ஒதுக்கியே வைத்திருக்கின்றனர்.

Published:Updated:
நல்லூர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூரைச் சேர்ந்த வேலு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``எங்கள் ஊரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களிடம், கோயில் திருவிழாக்களின் போது தலைக்கட்டு வரியினை ஊர்க்காரர்கள் வாங்கிகொள்ள மாட்டார்கள். இதேபோல், திருவிழாவில் கலந்துகொள்ளவும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள், எங்களுடன் நெருக்கமாக இருந்த என ஊரில் சுமார் 28 குடும்பங்களை சுப, துக்க நிகழ்ச்சிகள் என அனைத்து விஷயங்களிலும் ஒதுக்கியே வைத்திருக்கின்றனர். எங்கள் அனைவரையும் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ``சம்மந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரிவசூல் செய்து திருவிழாக்களில் பங்கேற்க வைக்க வேண்டும். இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தனர்.

வழக்கு தொடர்ந்த வேலுவிடம் பேசினோம், ``ஆண்டாண்டு காலமா எங்க ஊர்ல சாதி மறுப்பு திருமணம் செஞ்சவங்க எல்லாரையும் ஊரைவிட்டு ஒதுக்கியே தான் வச்சிருக்காங்க. எங்க உறவினர்களையும் சேர்த்து கிராமத்தில இருக்க யாரும் எங்களோட எந்த உறவும் வச்சிக்கக்கூடாதுன்னு, ஊர் முக்கியஸ்தர்கள் கட்டளை போட்டுருவாங்க. அப்படி எங்க கூட யார் பழகுனாலும், அவங்களையும் எங்களைப் போல ஒதுக்கி வச்சிடுவாங்க. அதனால, குடும்பத்தினர் தவிர மற்ற யாரும் எங்ககிட்ட பேச கூட மாட்டாங்க. விசேஷம், துக்கம்னு எந்த நிகழ்ச்சிகள்லயும், கலந்துக்க மாட்டாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பக்கத்துல, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில்ல பிரமாண்டமா திருவிழா நடக்கும். அதற்கு எங்க ஊர்லயிருந்து பால்குடம், முளைப்பாரி எல்லாம் எடுத்துக்கிட்டு போவோம். இந்த திருவிழாக்களுக்கு, ஊர்ல உள்ள குடும்பத்துக்கு எல்லாம் தலைக்கட்டு வரி வாங்கிக்கிட்டு திருவிழா நடத்துவாங்க. நாங்க தலைக்கட்டு வரி கொடுக்கப்போனா வாங்கமாட்டாங்க. ஒருமுறை திருவிழாவின் போது, பால்குடம் எடுத்துக்கிட்டுப் போன என் மகளை அடிச்சி அனுப்பிட்டாங்க. சித்தப்பா, பெரியப்பான்னு ரெண்டு பேர் இறந்தப்ப சடங்குகள் செய்யலை. இப்படியெல்லாம், ஊருக்குள்ள இருந்தும் உறவினர்களுடன் பேசக்கூட விடாத நடைமுறைகள் மாற்றப்படணும்னு தான் நீதிமன்றத்தை நாடினேன். தீர்ப்புக்கு அப்புறமாவது எல்லாம் சரியாகனும்" என்கிறார்.

புதுக்கோட்டை: சாதிமறுப்பு திருமணம்; ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - விடிவுகாலம் எப்போது?!

ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் என்பவரிடம் பேசினோம், ``87ல்ல சாதி மறுப்பு திருமணம் செஞ்சிக்கிட்டேன். ஊரைவிட்டு ஒதுக்கி தான் வச்சிருக்காங்க. ஆரம்பத்துல ஊருக்குள்ளயே இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. 10 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் அபராதம் எல்லாம் கட்டி ஊருக்குள்ள சேர்த்தாங்க. கொஞ்ச நாள்ல மீண்டும் ஒதுக்கி வச்சிட்டாங்க. நீதிமன்றத்துக்குப் பல முறை போயிருக்கேன். எங்களுக்கு சாதகமா தான் தீர்ப்பு இருக்கும். எங்ககிட்ட தலைக்கட்டு வரி வாங்கிக்கிறதா சொல்லி அதிகாரிகள்கிட்ட சொல்வாங்க. கடைசியா வாங்கவும் மாட்டாங்க. சேர்க்கவும் மாட்டாங்க. அதிகாரிகளும் அதோட விட்டுருவாங்க. நானும் விட்டுட்டேன். இப்போ, கிடைச்சிருக்க தீர்ப்புக்குப் பிறகாவது, எல்லாம் மாறும்னு நம்பிக்கை வந்திருக்கு. அதிகாரிகள் நடைமுறைப்படுத்தணும்" என்கிறார்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.