Published:Updated:

மறுமணம் குறித்துக் கேள்வி கேட்ட மனைவியைத் தீவைத்துக் கொளுத்திய கணவன் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

குற்றம்

இருவருக்கும் இடையே நடந்த சண்டையில், மதலை அம்மாளை, வேளாங்கண்ணி மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்திருக்கிறார். இதில், பதறித் துடித்தவர் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

மறுமணம் குறித்துக் கேள்வி கேட்ட மனைவியைத் தீவைத்துக் கொளுத்திய கணவன் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இருவருக்கும் இடையே நடந்த சண்டையில், மதலை அம்மாளை, வேளாங்கண்ணி மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்திருக்கிறார். இதில், பதறித் துடித்தவர் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

Published:Updated:
குற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள விட்டா நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி (48). இவரின் மனைவி மதலை அம்மாள் (45). இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மதலை அம்மாளுக்குத் தெரியாமல், வேளாங்கண்ணி, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். இது, மதலை அம்மாளுக்குத் தெரியவர வீட்டில் கலவரம் வெடித்திருக்கிறது. அவ்வப்போது, இவர்கள் இருவருக்கிடையில், பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில், மதலை அம்மாளை வேளாங்கண்ணி மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்திருக்கிறார். இதில், பதறித் துடித்தவர் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

இந்த நிலையில், அவர் உயிர் பிரியும்போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மண்ணெண்ணெய் ஊற்றிப் உயிரைப் பறித்த வேளாங்கண்ணி மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. அபராதத்தைக் கட்டத்தவறினால், மேலும், ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார். அதன்படி, வேளாங்கண்ணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!