Published:Updated:

13 ஆண்டுகளுக்கு முன்பு கணவனைக் கொன்ற மனைவி; தாயைக் கொன்ற மகன்! -தூக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

மகன் கையால் வெட்டுப்பட்டு இறந்துபோன திலகராணி, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்னையில் அவரின் கணவரான தங்கராஜின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி திலக ராணி (50). இவர்களின் மகன் ஆனந்த் (25). கட்டடத் தொழிலாளியான ஆனந்த், தன் தாய் திலக ராணியிடம், சொத்துகளைத் தனது பெயரில் எழுதிக்கொடுக்க பலமுறை வலியுறுத்தியும் பிரித்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆனந்த், திலக ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து, தாயின் தலையைக் கையில் எடுத்துக்கொண்டு போய் மழையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். குற்றவாளி ஆனந்தைக் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். கடந்த 2018-ல் நடந்த இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

ஆனந்த் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ``தாயைக் கொலை செய்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனையும், அதோடு ரூ.50,000 அபராதம் விதிக்கிறோம்” என அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து ஆனந்த் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

க்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..!' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7

மகன் கையால் இறந்துபோன திலக ராணி, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்னையில் அவரின் கணவரான தங்கராஜின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலைசெய்திருக்கிறார். அந்தக் குற்றத்துக்காகச் சிறைக்குச் சென்று விடுதலையாகி, தனியாக வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான்,சொத்துத் தகராறு காரணமாக தாயை வெட்டிப் படுகொலை செய்து அந்தக் குற்றத்துக்காக தற்போது ஆனந்த் சிறைக்குச் சென்றிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு