Published:Updated:

இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு - தாய், மகனுக்குச் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்!

தாய், மகனுக்குச் சிறை!
News
தாய், மகனுக்குச் சிறை!

கடந்த 2012, நவம்பர் 14-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதித் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம், வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னாத்தாள் (40). இவர் மகன் தினேஷ்வரன் (21). தினேஷ் வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்துவந்தார். ஈஸ்வரியும் தினேஷைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்வரியின் சம்மதத்துடன், அவர் பெற்றோர் வேறு ஒருவருடன் அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றுவந்தன. இது குறித்துத் தகவலறிந்த தினேஷ், ஈஸ்வரியின் வீட்டுக்குச் சென்று தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.

தாய், மகனுக்குச் சிறை
தாய், மகனுக்குச் சிறை

மேலும், அவரின் தாய் சின்னாத்தாளும் ஈஸ்வரியையும், அவர் குடும்பத்தினரையும் கடுமையாகத் திட்டியிருக்கிறார். இதனால், மனமுடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈஸ்வரியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரெகுநாதபுரம் போலீஸார், தினேஷையும் சின்னாத்தாளையும் கைதுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்

கடந்த 2012, நவம்பர் 14-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதித் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ஈஸ்வரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக, முதல் நபரான தினேஷுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்தார். தினேஷின் தாய் சின்னாத்தாளுக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். ``இருவரும் இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், இருவருக்கும் மேலும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்’’ என்றார்.