Published:Updated:

முன்விரோதம், கட்டையால் அடித்து விவசாயி கொலை! - புதுக்கோட்டையில் பெண் உட்பட 3 பேர் கைது

விவசாயி ரெங்கசாமி
விவசாயி ரெங்கசாமி

புதுக்கோட்டையில் விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அன்னவாசல் இடையர் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (43) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில்தான், வழக்கம் போல் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Representational Image
Representational Image

அப்போது, மருதமுத்துவின் மனைவி வெள்ளையம்மாள், மகன் மணிகண்டன் ஆகியோரும் சேர்ந்து ரெங்கசாமியைக் கட்டையால் தலையில் மாற்றி, மாற்றி கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த ரெங்கசாமி அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து, படுகாயமடைந்த ரெங்கசாமியை சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி உயிரிழந்தார். ரெங்கசாமி கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டதால்தான் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!

இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னவாசல் போலீஸார் ரெங்கசாமியைக் கொலை செய்ததாக மருதமுத்து, வெள்ளையம்மாள், மணிகண்டன் ஆகிய மூவரையும் குடும்பத்துடன் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு