Published:Updated:

புதுக்கோட்டை: தென்னந்தோப்பில் சூதாட்டம்; ரூ.13.62 லட்சம்! தி.மு.க கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது

ஆரம்பத்தில் சூதாட்டம் சிறிய அளவில் நடைபெற்ற நிலையில், தற்போது, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் சிறுகடவாக்கோட்டை பொன்னமங்கலம் பகுதியில் ஆவுடையார்கோயில் திமுக ஒன்றியக் கவுன்சிலர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்புக்குள் இரவு நேரவு நேரங்களில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

 சூதாட்டம்
சூதாட்டம்

இந்த நிலையில், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மீமிசல் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீஸார் புகார் கூறப்பட்ட தென்னந்தோப்புகளுக்குள் ரகசிய சோதனை நடத்தினர். சோதனையில், லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

மேட்ச் பிக்ஸிங்: `ஆட்டத்திலே இல்லாத சிலர் மூலம் சூதாட்டம்?’ -2011 உலகக்கோப்பை சர்ச்சை

தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் சுந்தரபாண்டியன், வெங்கடேசன், முத்து, பஷீர் அகமது, பக்ருதீன், விஜயகுமார், நீலகண்டன் உள்ளிட்ட 16 பேரைக் கைது செய்து செய்து அவர்கள் சூதாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.13,62,789 பணத்தையும் கைப்பற்றினர். அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது
கைது

ஆரம்பத்தில் சூதாட்டம் சிறிய அளவில் நடைபெற்ற நிலையில், தற்போது, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு