Published:Updated:

நீதிமன்றத்திலேயே ரூ.28 லட்சம் முத்திரைத்தாள் மோசடி! - புதுக்கோட்டை அதிர்ச்சி

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் வழக்குகளுக்கு, ரூ.27,66,500 மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்களை நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்தி மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் 2014-16 ஆண்டு வரை தாக்கலான அசல் வழக்கு ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 75 வழக்குகளில் ஆய்வுக் கட்டணமாக செலுத்தப்பட்ட முத்திரைத்தாள்களை ஆய்வு செய்த ஆய்வுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வழக்குகளில் அசல் முத்திரைத்தாள்களுக்கு பதிலாக, போலி முத்திரைத்தாள்களைத் தாக்கல் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

முத்திரைத்தாள்
முத்திரைத்தாள்
Representational Image2

அசல் முத்திரைத்தாளுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட முத்திரைத்தாள்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் வழக்குகளுக்கு, ரூ.27,66,500 மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்களை நீதிமன்றக் கட்டணமாக செலுத்தி மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

சொத்து முத்திரைத்தாள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

போலி முத்திரைத்தாள்கள் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளெல்லாம், வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மாவட்ட சார்பு நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி பால்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுபற்றிப் புகார் மனு கொடுத்தார்.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்

மோசடி, போலி முத்திரைத்தாள்கள் தாக்கல் செய்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், இது பற்றி விசாரித்துவருகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கிகள், தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் என விசாரணை நடைபெற்றுவருகிறது. நீதிமன்றத்திலேயே முத்திரைத்தாள் மோசடி செய்யப்பட்ட விவகாரம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு