Published:Updated:

புதுக்கோட்டை: ``சாதியத் தீண்டாமை கடைப்பிடிப்பவர்களுக்குக் கடும் தண்டனை" - ஆட்சியர் எச்சரிக்கை

ஆய்வு

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி ராஜனின் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, சம்பந்தப்பட்ட மக்களை, `நீங்க எல்லாம் உள்ள வரக் கூடாது’ என்று பட்டியல் சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை: ``சாதியத் தீண்டாமை கடைப்பிடிப்பவர்களுக்குக் கடும் தண்டனை" - ஆட்சியர் எச்சரிக்கை

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி ராஜனின் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, சம்பந்தப்பட்ட மக்களை, `நீங்க எல்லாம் உள்ள வரக் கூடாது’ என்று பட்டியல் சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கவயல் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வுசெய்தனர். அப்போது, ``இங்குள்ள அய்யனார் கோயிலில் எங்களைப் பல தலைமுறைகளாக உள்ளே சென்று சாமி கும்பிடவிடுவதில்லை.

இங்கு இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்றுச் சாதியினரால் சாதியத் தீண்டாமை தொடர்ந்து இருந்துவருகிறது“ எனப் புகார்களை அடுக்கினர். உடனே, சம்பந்தப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குக் கூட்டிச் சென்று சாமி கும்பிடவைத்தார்.

அப்போது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி ராஜன் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, சம்பந்தப்பட்ட மக்களை, `நீங்க எல்லாம் உள்ள வரக் கூடாது’ என்று பட்டியல் சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். தன் கண்முன்பே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், சிங்கம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை: ``சாதியத் தீண்டாமை கடைப்பிடிப்பவர்களுக்குக் கடும் தண்டனை" - ஆட்சியர் எச்சரிக்கை

இதேபோல், இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட டீக்கடையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. டீக்கடை உரிமையாளர் மூக்கையா, சாமியாடிய சிங்கம்மாள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து இவர்களைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இதற்கிடையே மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு சாதியத் தீண்டாமை நடந்தாலும், உடனடியாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் சாதியரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும், பின்வரும் கைப்பேசி எண்ணுக்கு 9443314417  வாட்ஸ் அப் மூலமாக மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.