Published:Updated:

புதுக்கோட்டை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்! -அறுவை சிகிச்சையில் பலியான சோகம்

 ராணி
ராணி

``குடும்பக் கட்டுப்பாடு பண்ணியும் எப்படி ராணிக்குக் குழந்தை உண்டாச்சுன்னு மருத்துவர்கள் கிட்ட கேட்டப்ப, `பயப்படத் தேவையில்லை. கருவை அகற்றிவிடலாம்னு’ சொல்லி எங்க வாயை அடைச்சுட்டாங்க.”

புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரன். இவரின் இரண்டாவது மகள் ராணி. ராணிக்கும், கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த 2018-ல்தான் இவர்களுக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே ஒரு மகள் இருக்கும் நிலையில், அப்போது மகனும் பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சம்மதித்ததன் பேரில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில், புதுக்கோட்டைக்கு வந்திருந்த ராணிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புகார்
புகார்

அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்த ராணிக்கு மீண்டும் கருத்தரிப்பு ஏற்பட்டு, குழந்தை உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. கருவை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எங்கே குழந்தையை அகற்றாமல்விட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடுவோ என்று சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது ராணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 2018-ல் குடும்பக் கட்டுப்பாட்டை அலட்சியமாகச் செய்த மருத்துவக்குழு மீதும், தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர்.

Vikatan

இது பற்றி ராணியின் உறவினர்களிடம் கேட்டபோது, ``பையன் பிறந்தப்பவே, அதாவது மூணு வருஷத்துக்கு முன்னாலேயே குடும்பக் கட்டுப்பாடு பண்ணியாச்சு. குடும்பக் கட்டுப்பாடு பண்ணியும் எப்படி ராணிக்குக் குழந்தை உண்டாச்சுன்னு மருத்துவர்கள்கிட்ட கேட்டப்ப, `பயப்படத் தேவையில்லை. கருவை அகற்றிவிடலாம்னு’ சொல்லி எங்க வாயை அடைச்சுட்டாங்க. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி மருத்துவர்கள், செவிலியர்கள் ராணி விஷயத்தில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டிருக்காங்க. அலட்சியா செயல்பட்ட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

புதுக்கோட்டை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்! -அறுவை சிகிச்சையில் பலியான சோகம்

இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "ராணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, ஆக்சிஜன், பிபி ரொம்பவே குறைய தொடங்கியிருக்கிறது. மருத்துவர்கள் ராணியைக் காப்பாற்ற எவ்வளவோ போராடிப் பார்த்திருக்கிறார்கள். முடியாமல் போனது. ஆனாலும், இது குறித்தெல்லாம் துறைரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு