Published:Updated:

தஞ்சாவூரில் பைக்கை திருடி, புதுக்கோட்டையில் செயின் பறிப்பு! - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

செயின் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட செயின் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

தஞ்சாவூரில் பைக்கை திருடி, புதுக்கோட்டையில் செயின் பறிப்பு! - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட செயின் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

Published:Updated:
செயின் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே நகர்ப் பகுதிகளிலும், அரிமளம், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. செயின் பறிப்பைத் தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸார் செயின்பறிப்பு வழக்குகளைத் துரிதமாக விசாரிப்பதுடன், வாகன தணிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் கணேஷ் நகர் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இருவரும் போலீஸாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கின்றனர்.

அவர்களின் இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்ட போது, அதில் நம்பர் பிளேட் இல்லை. மேலும், அதில் தங்க செயின்கள் இருந்தன. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 9 பவுன் நகை,நம்பர் பிளேட் இல்லாத அந்த டூவிலரையும் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூரில் பைக்கை திருடி, புதுக்கோட்டையில் செயின் பறிப்பு! - இளைஞர்கள் சிக்கியது எப்படி?

போலீஸார் விசாரணையில், பிடிபட்ட இருவரும் புதுக்கோட்டை அருகே திருநாளூரைச் சேர்ந்த முருகானந்தம், மறமடக்கியைச் சேர்ந்த சந்துரு என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகானந்தம் மீது புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட செயின் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நம்பர் பிளேட் இல்லாத டூவிலரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியிலிருந்து திருடியிருக்கின்றனர். அந்த டூவிலரை வைத்தே புதுக்கோட்டை நகர் மற்றும் திருமயம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். மூன்றாவதாக அதே போல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முயன்ற போது, போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கியிருக்கின்றனர். எப்போதும் செயின் பறிப்பில் ஈடுபட்ட பின்பு அந்த நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில், இளைஞர்கள், டூவிலரை வாங்கி, அந்த டூவிலர்கள் மூலம் பல இடங்களில் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். பின்பு அந்த டூவிலர்களைத் தண்ணீரில் மூழ்க வைத்துவிடுவார்கள். ஆனால், இதில் கொஞ்சம் வித்தியாசமாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் டூவிலரைத் திருடி புதுக்கோட்டையில் செயின் பறிப்புச் சம்பத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism