Published:Updated:

டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களை ஏமாற்றிய பெண்; போலீஸ் அதே செயலியில் வைத்த பொறியில் சிக்கியது எப்படி?

டேட்டிங் ஆப்

டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களை ஏமாற்றிவந்த பெண்ணை, போலீஸார் அதே செயலியைப் பயன்படுத்தியே கைதுசெய்தனர்.

டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களை ஏமாற்றிய பெண்; போலீஸ் அதே செயலியில் வைத்த பொறியில் சிக்கியது எப்படி?

டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களை ஏமாற்றிவந்த பெண்ணை, போலீஸார் அதே செயலியைப் பயன்படுத்தியே கைதுசெய்தனர்.

Published:Updated:
டேட்டிங் ஆப்

புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ``பம்பில் என்ற டேட்டிங் செயலியில் தன்னை ஷிகா என்று அறிமுகப்படுத்திய ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றேன். அறையில் இருந்தபோது அவர் தாகமாக இருப்பதாகக் கூறினார். நான் தண்ணீர் எடுத்துவந்து கொடுப்பதற்குள் அந்தப் பெண் என் செல்போன், மோதிரம், செயினை கொள்ளையடித்துக்கொண்டு சென்றுவிட்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

டேட்டிங்
டேட்டிங்

அவர் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். அந்த இளைஞர் புகாரில் குறிப்பிட்டிருந்த ஹோட்டலில் அறை பதிவுசெய்ய அந்தப் பெண் வழங்கியிருந்த அடையாள அட்டை போலியானது என்றும், அறைக்கு வருவதற்குக்கூட வேறு யாரோ ஒருவரின் செல்போனிலிருந்துதான் தொடர்புகொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அதனால் அந்தப் பெண் தொடர்பான எந்தவிதத் தகவலும் போலீஸாருக்கு துப்பு துலங்கவில்லை.

மேலும், இதே போன்று மற்றொரு புகாரும் காவல்துறைக்கு வந்திருக்கிறது. அதிலும், பெண் ஒருவர் ஹோட்டலில் சிறிது நேரம் பேசி போதை மருந்து கொடுத்து இளைஞரை மயக்கமடையச் செய்து, அவரின் நகை மற்றும் உடசிமைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தார். இரு புகார்களிலும் ஒரே பெண் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பணம் - மோசடி
பணம் - மோசடி
சித்தரிப்புப் படம்

அதன் ஒரு பகுதியாக போலீஸார் `பம்பில்' செயலி நிறுவனத்திடம் தகவல்களைப் பெற முயன்றனர். ஆனால், போதுமான உதவி கிடைக்கவில்லை என்பதால், போலீஸாரே பம்பில் டேட்டிங் செயலியில் பல போலிக் கணக்குகளைத் தொடங்கி அந்தப் பெண்ணை தேட தொடங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக சந்தேகத்துக்குரிய பெண் ஒருவர் போலீஸ் ஒருவரை பம்பில் செயலியில் தொடர்புகொண்டிருக்கிறார். அவர்களின் தகவல் பரிமாற்றத்தில் ஒரு செல்போன் எண்ணையும் கொடுத்திருக்கிறார்.

கைது | சித்திரிப்பு படம்
கைது | சித்திரிப்பு படம்

அந்த எண்ணைத் தொடர்புகொண்ட போலீஸார், அந்தப் பெண்ணைச் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், அவர்தான் தேடப்பட்டுவந்தவர் என்பது உறுதியானது. பாதிக்கப்பட்டவர்கள் நேரில் பார்த்து உறுதிப்படுத்திய பிறகு 27 வயது பெண் கைதுசெய்யப்பட்டார். தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

டேட்டிங் செயலி மூலம் இது போன்ற மோசடிச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. எனவே, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.