Published:Updated:

`ஐசியுவில் திருமணம்... மூன்றாவது நாளே எஸ்கேப்!' - போலீஸுக்குத் தண்ணிகாட்டும் புனே இளைஞர்

புகார் கொடுத்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரின் குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இளைஞர் சுராஜ் நளவாடே
இளைஞர் சுராஜ் நளவாடே ( ani )

புனே மாவட்டம் அருகே சகான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுராஜ் நளவாடே. இவர் அந்தப் பகுதியில் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அந்தப் பெண் காவல் நிலையில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நளவாடே தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். இதன்பின் திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் கேட்டபோது, ​​நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி திருமணத்துக்கு மறுத்துவிட்டார்" என்று கூறியிருந்தார்.

இவரின் புகாரை அடுத்து நளவாடேவை போலீஸார் விசாரணைக்கு அழைத்து வரச் சென்றனர். ஆனால், இந்தத் தகவல் முன்கூட்டியே அறிந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இந்தச் சூழ்நிலையில்தான் புகார் கொடுத்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரின் குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இளைஞர் சுராஜ் நளவாடே
இளைஞர் சுராஜ் நளவாடே
ani

ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அப்போது அந்தப் பகுதி மக்கள் சிலர் நளவாடேவை கையும் களவுமாகப் பிடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். நேராகப் பெண் இருக்கும் ஐசியு வார்டுக்கு அவரை அழைத்துச் சென்ற மக்கள் கட்டாயப்படுத்தி அங்கேயே பெண்ணை நளவாடேவுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்குப் பின்பு இரண்டு நாள்கள் அந்தப் பெண்ணுடன்தான் நளவாடே இருந்துள்ளார்.

ஆனால், மூன்றாவது நாள் அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் மீண்டும் நடந்த சம்பவம் குறித்து போலீஸில் அந்தப் பெண் புகார் அளிக்க, தற்போது நளவாடே மீது போலீஸார் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் தேடிவருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

`விடுதியில் நகை, பேன்ட், சட்டையுடன் பெண் எஸ்கேப்' - சென்னை அரசு அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!