Published:Updated:

காவலர் கையிலிருந்து திடீரென வெடித்த துப்பாக்கி; படுகாயமடைந்த செல்போன் கடை ஊழியர்! - வைரலாகும் வீடியோ

துப்பாக்கி வெடித்து விபத்து ( ட்விட்டர் )

பஞ்சாப் மாநிலத்தில் செல்போன் கடையில் காவல் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.

காவலர் கையிலிருந்து திடீரென வெடித்த துப்பாக்கி; படுகாயமடைந்த செல்போன் கடை ஊழியர்! - வைரலாகும் வீடியோ

பஞ்சாப் மாநிலத்தில் செல்போன் கடையில் காவல் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Published:Updated:
துப்பாக்கி வெடித்து விபத்து ( ட்விட்டர் )

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் செல்போன் கடையொன்றில், போலீஸ் அதிகாரியொருவர் கையில் துப்பாக்கியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக துப்பாக்கி வெடித்ததில் கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், போலீஸ் அதிகாரியொருவர் செல்போன் கடையில் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது கடையிலிருந்த நபர்களிடம் பேசிக்கொண்டே அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வெளியே வைக்கிறார். சில விநாடிகளுக்குப் பிறகு அந்த அதிகாரி துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது. இந்தச் சம்பவத்தில் கடையில் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கி
துப்பாக்கி

இது குறித்துப் பேசிய போலீஸ் உயரதிகாரியொருவர், ``எதிர்பாராதவிதமாகத்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. இதை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், காயமடைந்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவிவருகின்றன.

இதற்கு முன்னர், ஜம்மு-காஷ்மீரில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஒரு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் முகமது ஆசிப் பத்ரு என்பவர் படுகாயமடைந்தார். அதிகாரிகள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.