Published:Updated:

`எங்கள் மரியாதைக்காகச் சுட்டுக் கொன்றோம்!'- பழைய பகையை ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்திய ரவுடிகள்

8 குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார் மன்தீப். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

ஹர்விந்தர் சிங் சந்து
ஹர்விந்தர் சிங் சந்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள பண்டோரி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மன்தீப் சிங். இவர் செவ்வாய்க்கிழமை மாலை நேரம் தனது இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது எதிரில் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் மன்தீப்பை வழிமறித்து வாக்குவாதம் செய்து பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் 8 குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துவிட்டார் மன்தீப். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

Gun shot
Gun shot

இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீஸார் குற்றவாளிகளைத் தேட ஆரம்பித்தனர். ஆனால், அவர்களால் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. காரணம் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளின் அடையாளத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில், குற்றவாளிகளே தங்கள் குற்றத்தை ஃபேஸ்புக் மூலமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதேபகுதியைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் சந்து என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `மன்தீப்பைக் கொன்றது நாங்கள்தான்' எனக் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

`அம்மாவிடம் பழகாதே; எச்சரித்தும் கேட்காத ஆட்டோ டிரைவர்'- கொலை செய்த மகன்!

அவருடைய பதிவில், `பண்டோரியில் மன்தீப் சிங்கை கொலை செய்தது நாங்கள்தான். எங்கள் மரியாதைக்காக இந்தக் கொலையைச் செய்தோம். மன்தீப் உடன் எங்களுக்கு பழைய பகை இருந்தது. எதிர்காலத்தில் யாராவது இதுபோன்ற தவறு செய்தால், அவர்கள் இதேபோன்ற தலைவிதியை அனுபவிப்பார்கள்' எனப் பதிவிட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கூடவே இருவரும் துப்பாக்கியோடு இருப்பது போன்று புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இப்படியொரு பதிவை வெளியிட்ட பின்னரும், சம்பந்தப்பட்டவர்களைப் போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ஹர்விந்தர் சிங் சந்து ஃபேஸ்புக் பதிவு
ஹர்விந்தர் சிங் சந்து ஃபேஸ்புக் பதிவு

பஞ்சாப் மாநிலத்தில் சமீபகாலமாக கேங்ஸ்டர் கலாசாரம் பெருகி வருகிறது. கொலை செய்துவிட்டுக் குற்றத்தை ஃபேஸ்புக்கில் ஒப்புக்கொள்வது அங்கு இது முதல்முறையல்ல. இதற்குமுன்பும் இதுபோன்ற சில கேங்ஸ்டர்கள் கொலை செய்துவிட்டு குற்றத்தை ஃபேஸ்புக்கில்புக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. `இது தற்போது குற்றவாளிகள் மத்தியில் புதிய கலாசாரமாக மாறிவருகிறது' எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

`சேர மறுத்துவிட்டான்; கொன்றுவிட்டேன்'- கல்லூரி மாணவர் கொலை வழக்கில் போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்!