Published:Updated:

கேங் வார்; கனடா டீம் - பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற மறுநாள்... பஞ்சாப் பாடகர் கொலையில் நடந்தது என்ன?

சித்து மூஸ் வாலா

பஞ்சாப் மாநிலத்தில், பாடகர் ஒருவரை கனடா நாட்டுக் கும்பல் சுட்டுக்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேங் வார்; கனடா டீம் - பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற மறுநாள்... பஞ்சாப் பாடகர் கொலையில் நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலத்தில், பாடகர் ஒருவரை கனடா நாட்டுக் கும்பல் சுட்டுக்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சித்து மூஸ் வாலா

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற பின்னர், கடந்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஏற்கெனவே பஞ்சாப்பில் கடுமையான கேங்-வார் நடந்துகொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாடகருமான சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூஸ் வாலா தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் ஒரு கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அந்நேரம் அவர்களின் காருக்கு நேர் எதிரில் இரண்டு கார்களில் வந்த மர்மக் கும்பல் மூஸ் வாலா மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டது. இருக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூசா வாலா உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்துபோயிருந்தார்.

சித்து மூஸ் வாலா
சித்து மூஸ் வாலா

அவருடன் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். மூஸ் வாலாவுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அடுத்த நாள் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேங்க் வார் காரணமாகவே இந்தப் படுகொலை நடந்திருப்பதாக பஞ்சாப் டி.ஜி.பி பவுரா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர் நடத்தியிருப்பதாகவும், அந்தக் கூட்டத்தில் கனடாவைச் சேர்ந்த லக்கி என்பவர் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்தார். மூஸ் வாலாவுக்கு இரண்டு கமாண்டோ பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களை மூஸ் வாலா அழைத்துச் செல்லவில்லை என்றும், குண்டு துளைக்காத கார் மூஸ் வாலாவிடம் இருப்பதாகவும் அதையும் வெளியில் சென்றபோது எடுத்துச் செல்லவில்லை என்றும் பவுரா தெரிவித்தார். இந்தக் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றையும் போலீஸார் அமைத்துள்ளனர். இந்தக் காரியத்தில் ஈடுபட்ட யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுப்தீப் சிங் சித்து என்ற பெயரைக்கொண்டவர், சித்து மூஸ் வாலா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். மூஸ் வாலா என்பது அவரின் ஊர் பெயர். மிகவும் புகழ்பெற்ற பாடல்களைப் பாடியிருக்கும் சித்து மூஸ் வாலா துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும்விதமாக பாடல்களைப் பாடுவதாக விமர்சனம் எழுவதுண்டு. கொரோனா காலத்தில் துப்பாக்கியால் சுட்டதாக அவர்மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதோடு பாடல்கள் மூலம் வன்முறையைத் தூண்டுவதாக அவர்மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism