Published:Updated:

`பட வாய்ப்புக்காக மும்பை பிளான்; மனைவிமீது சந்தேகம்!’- டி.வி தொகுப்பாளினி கொலையில் சிக்கிய கணவர்

Representational Image
Representational Image

பஞ்சாப்பை சேர்ந்த டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் கொலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்பவர், கடந்த மாதம் 30-ம் தேதி, நைனிதால் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அனிதா சிங், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் (Ferozepur) பகுதியில் தன் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது உடல் நைனிதால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.

நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா, படவாய்ப்புக்காகவும் காத்திருந்தார். நைனிதால் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களைக்கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், இரண்டு ஆண்களுடன் காரில் சென்றது தெரியவந்தது. அவருடன் காரில் பயணித்த நபர் குறித்து விசாரித்துவந்தனர். இதற்கிடையில், அனிதாவின் கணவர் ரவீந்தர்பால் சிங் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

சிசிடிவி-யில் பதிவான காரின் எண்ணைக்கொண்டு விசாரணையில் இறங்கினர் பஞ்சாப் போலீஸார். அந்தக் கார் ரமன்ஜீத் சிங் என்பவருடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரமன்ஜீத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், ‘தனக்கு எதுவும் தெரியாது. கடந்த சில தினங்களுக்கு முன்பு என் உறவினர் ரவீந்தர் மற்றும் அவரது நண்பர் குல்தீப் இருவரும் காரை வாங்கிச்சென்றனர்' என்று கூறினர். அவர் தெரிவித்த ரவீந்தர் என்பவர் கொலை செய்யப்பட்ட அனிதாவின் கணவர்தான். இதையடுத்து, ஹரித்துவாரில் வைத்து ரவீந்தர் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில், மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

`தாயின் தவறான பழக்கம்; குடும்பத்தைப் பழிதீர்த்த நபர்’- நால்வர் மரணத்தில் அவிழ்க்கப்பட்ட மர்மம்

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “அனிதாவுக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம். இதன் காரணமாக, அவர் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மும்பைக்கு இடம்பெற முடிவுசெய்துள்ளார். அனிதாவின் இந்த முடிவு, அவரது கணவர் ரவீந்தருக்குப் பிடிக்கவில்லை. மேலும், அனிதாவுக்கு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் ரவீந்தர் சந்தேகித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில்தான், ஜனவரி 30-ம் தேதி தன் நண்பரை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, அனிதாவை அழைத்து வந்துள்ளார். தன் நண்பர் குல்தீப்புக்கு மும்பையில் சிலரைத் தெரியும். அவர், உன்னுடைய பணிக்கு உதவுவார் எனக் கூறி அழைத்துவந்துள்ளார்.

அனிதாவின் இந்த முடிவு, அவரது கணவர் ரவீந்தருக்குப் பிடிக்கவில்லை. மேலும், அனிதாவுக்கு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் ரவீந்தர் சந்தேகித்துள்ளார்.
போலீஸ் அதிகாரி

அனிதா மற்றும் ரவீந்தர் இருவரும் நைனிதால் பயணமாகியுள்ளனர். நைனிதாலில் உள்ள ஒரு தாபாவில் இருவரும் குல்தீப்பை சந்தித்துள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி மயக்க மருந்து கலந்த டீயை அனிதாவுக்கு வழங்கியுள்ளனர். அதை அவர் பருகியதும் மயக்கமடைந்துவிட்டார். அனிதாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, இருவரும் கொலை செய்துள்ளனர். அனிதாவின் உடலை எடுத்துச்செல்வதற்காக உறவினரிடம் காரை முன்பே வாங்கியுள்ளனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில், நைனிதாலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து உடலுக்குத் தீ வைத்துள்ளனர். அதன்பின்னர், இருவரும் பஞ்சாப் திரும்பிவிட்டனர். மனைவியின் மீது இருந்த சந்தேகத்தின் காரணமாக, இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனிதாவின் கணவர் ரவீந்தர்பால் சிங் மற்றும் அவரது நண்பர் என இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு