Published:Updated:

பஞ்சாப்: `சீக்கியர்களின் வழிபாட்டுத்தலங்களை அவமதிக்க முயற்சியா?' - இரண்டு பேர் அடித்துக்கொலை!

பஞ்சாபில் வன்முறை
News
பஞ்சாபில் வன்முறை

பஞ்சாபில் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலங்களை அவமதிக்க முயன்ற இரண்டு பேரை பொது மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாபில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக இந்த தேர்தலில் பஞ்சாபில் மத வன்முறைகளை வெடிக்கச் செய்யும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று மாலை அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொற்கோயிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, கருவறை தடுப்பு கேட்டை தாண்டி உள்ளே குதித்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூல் அருகில் வைக்கப்பட்டிருந்த கத்தியைக் கையில் எடுத்தார். உடனே அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்த வாலிபரை வெளியில் இழுத்து வந்து அடித்து உதைத்தனர். அந்த வாலிபரின் செயலால் வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூறி ஆத்திரத்தில் கோயிலிலிருந்தவர்கள் அவரை அடித்தே கொன்றனர்.

சீக்கியர்கள்
சீக்கியர்கள்

இந்தச் சம்பவத்தைத் துணை கமிஷனர் பர்மிந்தர் சிங் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிற பக்தர்களைப் போல வழிபடுவதற்காக அமைதியாக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவர் வழிபடுவதற்கான வாய்ப்பு வந்தவுடன் தடுப்பைத் தாண்டி கருவறைக்குள் நுழைந்து புனித நூல் அருகில் வைக்கப்பட்டு இருந்த கத்தியை எடுத்தார். இதனால் பக்தர்கள் அவரை மடக்கி வெளியில் கொண்டு வந்து அடித்ததில் அந்த நபர் இறந்து போனார்" என்று தெரிவித்தார். வழிபாட்டுத்தலத்தைக் களங்கப்படுத்த நடந்த முயற்சிக்குப் பஞ்சாப் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது நடந்து 24 மணி நேரத்துக்குள் மேலும் ஒருவர் இதே போன்ற காரியத்தில் ஈடுபட்டதால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கபூர்தலா மாவட்டத்தில் உள்ள நிஜாம்பூர் என்ற கிராமத்தில் உள்ள குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒருவர் நுழைந்து சீக்கியர்களின் கொடியை (நிஷான் சாஹிப்) அவமதித்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட கிராம மக்கள் அவரை பிடித்து அடித்தனர். இது குறித்துக் கேள்விப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் அந்த நபரை மீட்டு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் தங்கள் முன்பு விசாரிக்கவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

குருத்வாரா
குருத்வாரா
விக்கிபீடியா

இது தொடர்பாக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சீக்கியர்கள் கொடியை அவமதித்த நபரை போலீஸாரிடமிருந்து தனியாக இழுத்துச் சென்று அடித்து கொன்றனர். 24 மணி நேரத்தில் இரண்டு பேர் மத ரீதியிலான மோதலில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதமும் இதே போன்று சீக்கியர்களின் புனித நூலை அவமதிக்க முயன்ற நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.