Published:Updated:

நெல்லை: விபத்து நடந்த கல்குவாரி உரிமையாளர் கைது! - மங்களூரில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டார்

சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார்

நெல்லை கல்குவாரி விபத்தில் இருவர் உயிர் தப்பிய நிலையில், மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்து ஆறு நாள்கள் ஆகிவிட்ட நிலையில், மற்றொருவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

நெல்லை: விபத்து நடந்த கல்குவாரி உரிமையாளர் கைது! - மங்களூரில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டார்

நெல்லை கல்குவாரி விபத்தில் இருவர் உயிர் தப்பிய நிலையில், மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்து ஆறு நாள்கள் ஆகிவிட்ட நிலையில், மற்றொருவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

Published:Updated:
சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார்

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டுவந்துள்ளது. அதில் 14-ம் தேதி நள்ளிரவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் ஆறு பேர் 350 அடி அழம்கொண்ட குவாரிக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

வெடிவைத்து பாறை தகர்ப்பு
வெடிவைத்து பாறை தகர்ப்பு

குவாரியில் பணியாற்றியபோது பாறை சரிவுக்குள் சிக்கிக்கொண்ட ராஜேந்திரனின் உடல் இருக்கும் இடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் உடல் அங்குள்ள பெரிய பாறைக்கு அடியில் கிடக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால் அந்தப் பாறையை வெடிவைத்துத் தகர்க்கும் பணி இன்று நடந்தது. 32 இடங்களில் துளைகள் போடப்பட்டு அவற்றில் ஜெலட்டின் குச்சிகளைவைத்து வெடிக்கவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெடிக்க வைக்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணி தற்போது நடக்கிறது. அதன் பிறகே ராஜேந்திரனின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியும் என தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துவிட்டனர். தீயணைப்புப்படையினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார்
சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார்

இந்த நிலையில், விபத்துக்குக் காரணமான குவாரியின் ஒப்பந்ததாரர் சங்கரநாராயணன், மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், குவாரியின் உரிமையாளரான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குவாரி உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோர் மங்களூரு நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அங்கு சென்று இருவரையும் கைதுசெய்தனர். இருவரும் நாளை நெல்லைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கைதானவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்
கைதானவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்

இதற்கிடையே, திசையன்விளையில் உள்ள கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் வீட்டில் நேற்று போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் வணிகர்களும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் திரும்பிவிட்டார்கள். இந்தச் சூழலில் இரவில் அவரது வீட்டை மர்ம நபர்கள் உடைத்து. அங்கிருந்து எதை எடுத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை.

கொள்ளையர்கள், தங்களைக் கண்டுபிடித்துவிடுவதைத் தடுக்கும் வகையில் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுவிட்டனர். பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தது யார், எதை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism