Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் ரெய்டில் சிக்கிய லட்சங்கள்... கலக்கத்தில் குமரி அதிகாரிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புநல அலுவலர் குமுதாவிடம் விசாரணை
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புநல அலுவலர் குமுதாவிடம் விசாரணை

நேற்று மாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த சில புரோக்கர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை காரணமாக அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர். மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த சில புரோக்கர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

சிலர் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து தப்பி ஓடினர். சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தை அங்கு போட்டுவிட்டு ஓடினர். பின்னர், அதிகாரிகள் கதவை மூடி சுமார் நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு புரோக்கரிடம் இருந்து மட்டும் ரூ.57,000 கைப்பற்றப்பட்டது. மேலும் விசரணை முடிவில் கணக்கில் வராத ரூ.86,590 கைப்பற்றப்பட்டது.

மார்த்தாண்டம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனை
மார்த்தாண்டம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனை

இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் நடந்த இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,35,000 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

இந்தப் பணம் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் என்று  கூறப்படுகிறது. இது குறித்து மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதா மற்றும் பிற ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். மதியம் 1.30 மணியில் இருந்து மாலை வரை இந்த சோதனை நடந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் அதிரடியால் அரசு அலுவலகங்களில் ஊழல் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு