Published:Updated:

முன்பகை; தம்பியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன்... சகோதரியின் புகாரால் வெளிச்சத்துக்கு வந்த கொலை

கொலை செய்யப்பட்ட பாக்கியராஜ்

ராஜபாளையம் தளவாய்புரம் அருகே குடும்பப் பகையில் தம்பியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தொழிலாளியை போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரம் சகோதரியின் புகாரால் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்பகை; தம்பியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன்... சகோதரியின் புகாரால் வெளிச்சத்துக்கு வந்த கொலை

ராஜபாளையம் தளவாய்புரம் அருகே குடும்பப் பகையில் தம்பியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தொழிலாளியை போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரம் சகோதரியின் புகாரால் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட பாக்கியராஜ்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமான சில மாதங்களிலேயே, மனைவி இவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். எனவே, உடன் பிறந்த சகோதரி மேரி ஆதரவுடன், பாக்கியராஜ் தனியே ஒரு வீட்டில் வசித்துவந்தார்.

பாக்கியராஜ்
பாக்கியராஜ்

இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நள்ளிரவு பாக்கியராஜ் வீடு திரும்பிய நேரத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்காமல், உறவினர்களே ஒன்று சேர்ந்து பாக்கியராஜின் உடலை அருகே உள்ள இடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் நேற்று பாக்கியராஜ் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற மேரி, வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பல்வேறு இடங்களிலும், சுவரிலும் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சகோதரன்‌ பாக்கியராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், பாக்கியராஜின் உடன்பிறந்த மூத்த சகோதரன் அந்தோணிராஜ் என்ற வேல்முருகனுக்கும், பாக்கியராஜுக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்பகை இருந்தது தெரியவந்தது.

கொலை
கொலை

இதை மனதில்கொண்டு தம்பி பாக்கியராஜை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர் விபத்தில் இறந்ததுபோல் ஜோடித்து நாடகம் நடத்தியது அம்பலமானது. இதைத் தொடர்ந்து, வேல்முருகனை போலீஸார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து, அவரின் இளைய சகோதரர் குமார் அடையாளம் காட்டிய இடத்தில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பாக்கியராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பாக்கியராஜின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், மயானத்திலேயே, விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுதன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism