Published:Updated:

செய்த வேலைக்கு பணம் கேட்ட பட்டியலின இளைஞர்... சிறுநீரை குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய அவலம்!

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தானில், செய்த வேலைக்கு பணம் கேட்ட பட்டியலின எலக்ட்ரீஷியனை மூன்று பேர் வற்புறுத்தி சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைபடுத்தியிருக்கின்றனர்.

செய்த வேலைக்கு பணம் கேட்ட பட்டியலின இளைஞர்... சிறுநீரை குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய அவலம்!

ராஜஸ்தானில், செய்த வேலைக்கு பணம் கேட்ட பட்டியலின எலக்ட்ரீஷியனை மூன்று பேர் வற்புறுத்தி சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைபடுத்தியிருக்கின்றனர்.

Published:Updated:
பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தான் மாநிலத்தில், செய்த வேலைக்கான பணத்தைக் கேட்ட பட்டியலினத்தவர, வற்புறுத்தி சிறுநீர் குடிக்கவைத்து, காலணியால் மாலை அணிவிக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட நபர், சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பாரத் குமார் (38) என்பராவார். இவர் ஒரு எலக்ட்ரீஷியன். இந்த நிலையில் எலக்ட்ரீஷியன் வேலைசெய்துவிட்டு அதற்கான பணத்தை கேட்கப்போய்தான் பாரத் குமார் இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார்.

தலித் மீது தாக்குதல்
தலித் மீது தாக்குதல்

மேலும், பாரத் குமாரை தாக்கியவர்களில் ஒரு நபர் அந்த கொடுமையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதுதொடர்பாக மூன்று பேர் மீது பாரத் குமார் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

பின்னர் இதுகுறித்து பேசிய சிரோஹி மாவட்ட டிஎஸ்பி தினேஷ் குமார், ``நவம்பர் 23-ம் தேதியன்று மூன்று பேர் மீது பாரத் குமார் புகார் அளித்தார். முன்னதாக, எலக்ட்ரீஷியனான பாரத் மின்சாரம் தொடர்பான சில வேலைகளைச் செய்து, ரூ.21,100 ரூபாய் பில் போட்டிருக்கிறார். அதற்கு அவர்களிடம் ரூ.5000 சம்பளமும் வாங்கியிருக்கிறார். அதையடுத்து நவம்பர் 19-ம் தேதியன்று, பாரத் மீதி பணத்தைக் கேட்பதற்காக மதியவேளையில் ஒரு தாபாவுக்குச் சென்றார். ஆனால் பாரத்தை அவர்கள் திரும்ப இரவு 9 மணிக்கு வரச் சொன்னார்கள்.

போலீஸ்
போலீஸ்

பின்னர் இரவு 9:10 மணிக்கு பாரத் அங்குச் சென்றபோது, அவர்கள் பணம் கொடுக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து பாரத், போலீஸில் புகார் செய்துவிடுவேன் எனக் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் பாரத்தை சாரமரியாகத் தாக்கத்தொடங்கியிருக்கின்றனர்.தொடர்ந்து வற்புறுத்தி சிறுநீர் குடிக்கவைத்து, காலணியால் மாலை அணிவித்து பாரத்தை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். இதனை அவர்களில் ஒருவனே வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார். இந்த வழக்கில் தற்போது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.