Published:Updated:

``என் மரணம் நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கும்!" -மருத்துவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை!

மருத்துவர் அர்ச்சனா ( ட்விட்டர் )

ரு கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது தற்போது ராஜஸ்தானில் பேசு பொருளாகியுள்ளது.

``என் மரணம் நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கும்!" -மருத்துவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை!

ரு கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது தற்போது ராஜஸ்தானில் பேசு பொருளாகியுள்ளது.

Published:Updated:
மருத்துவர் அர்ச்சனா ( ட்விட்டர் )

ராஜஸ்தான் மாநிலத்தின் தெளசா மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது தற்போது ராஜஸ்தானில் பேசு பொருளாகியுள்ளது.

நேற்று பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அர்ச்சனா என்ற மருத்துவர் பிரசவம் பார்த்துள்ளார். அதில் அந்த கர்ப்பிணிப்பெண் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இறந்த கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவரின் அலட்சியத்தால்தான் கர்ப்பிணிப்பெண் இறந்ததாகக் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தெளசா மாவட்ட காவல்துறை, மருத்துவர் அர்ச்சனா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ச்சனா தூக்கில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவருகிறது.

மருத்துவர் அர்ச்சனா பணி செய்த மருத்துவமனை
மருத்துவர் அர்ச்சனா பணி செய்த மருத்துவமனை
ட்விட்டர்

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் சந்த் கயல் கூறுகையில், ``செவ்வாய்க்கிழமை, கர்ப்பிணிப் பெண் இறந்ததால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் `மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் போராட்டம் நடத்தினர். காவல்துறை அர்ச்சனாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

அதன் பிறகு, அர்ச்சனா அவரது இல்லத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அர்ச்சனா அந்த கடிதத்தில், 'ஒருவேளை எனது மரணம் நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கும்' என எழுதியுள்ளார்" எனக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அர்ச்சனா எழுதி வைத்த கடிதம்
அர்ச்சனா எழுதி வைத்த கடிதம்
ட்விட்டர்

இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவினர், இன்று காலை 6 மணியிலிருந்து 24 மணி நேரத்துக்கு மாநிலம் முழுவதும் மருத்துவ சேவை நிறுத்தம் செய்துள்ளனர். மேலும், நாளை மாலை 6.30 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாகவும் இந்தியக் குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவ சங்கம், ``உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, நிபுணர் குழுவின் விசாரணையின்றி இதுபோன்ற வழக்குகளில் மருத்துவர் மீது குற்றம்சாட்ட முடியாது. பிரசவத்தின் போதான இரத்தபோக்கு - பிரசவத்திற்குப் பிறகு அதிக இரத்தபோக்கு போன்ற காரணத்தினால் அந்தப் பெண் இறந்துள்ளார் என்று ஃபோர்டா இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சாதி லால் மீனா
ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சாதி லால் மீனா
ட்விட்டர்

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், எஃப்.ஐ.ஆரை திரும்பப் பெற வேண்டும் மற்றும் அர்ச்சனாவின் குடும்பத்திற்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சாதி லால் மீனா, "இது ஒரு சோகமான சம்பவம், காவலர்களின் அலட்சியத்தால் ஒரு இளம் மருத்துவர் தற்கொலை செய்துள்ளார். அர்ச்சனா மீது பிரிவு 302-ன் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கக் கூடாது, இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. இந்த வழக்கில் மருத்துவ சமூகம் கோபமடைந்துள்ளது முற்றிலும் சரியே. எனவே, மாநில அரசு இது குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.