Published:Updated:

`இந்த வீடியோ மூலம், வரதட்சணை பணத்தை எடுப்பேன்’ - கணவனால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்

பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

வரதட்சணை பணத்துக்காக தன் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்த கணவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

`இந்த வீடியோ மூலம், வரதட்சணை பணத்தை எடுப்பேன்’ - கணவனால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்

வரதட்சணை பணத்துக்காக தன் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்த கணவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

2019-ம் ஆண்டு ஹரியானாவில் திருமணம் செய்துகொண்ட தம்பதி, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் வசித்து வருகின்றது. இந்த நிலையில், திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சணையைப் பெண் வீட்டார் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணை மாமியாரும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பலியல் வன்கொடுமை
பலியல் வன்கொடுமை

 இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ``எனது மாமியார் வரதட்சணை கேட்டு என்னைத் துன்புறுத்திவந்தார். அதனால் நான் என் கணவர் வீட்டிலிருந்து புறப்பட்டு எனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். சில நாள்களுக்கு முன் என் கணவர் என்னைச் சமாதானப்படுத்தி மீண்டும் அவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பின்புதான் அவர் ஒரு திட்டத்துடன் என்னை அழைத்து வந்தது தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

youtube
youtube

எனது விட்டார் வரதட்சணையான ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொடுக்காததால் என்னை அவரின் உறவினர்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக என் கணவரே மொபைல் போனில் பதிவு செய்தார். 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்பு, ``உன் வீட்டார் கொடுக்காத பணத்தை இந்த வீடியோவை யுடியூப்பில் பதிவு செய்வதன் மூலம் சம்பாதிப்பேன்” எனக் கூறி மிரட்டினார். மேலும், அந்த வீடியோவை யுடியூப்பில் பதிவும் செய்தார். அதன் பின்னும் விடாமல் என்னை அவரின் உறவினர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அங்கும் நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். அதன் பின் அங்கிருந்து எப்படியோ தப்பி வந்தேன்" எனக் கூறினார். 

காவல்துறை
காவல்துறை

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் பரத்பூர், கமான் காவல் நிலையத்தில் கணவர், அவரின் உறவினர்கள் இருவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக பரத்பூர், கமான் காவல் நிலையத்தின் அதிகாரி தௌலத் சாஹு, ``பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யூடியூப்பில் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism