Published:Updated:

ராஜஸ்தான்: ஒரே இரவில் இருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

பாலியல் வன்கொடுமை

லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களால் ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான்: ஒரே இரவில் இருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களால் ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம், ஜான்வர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 14 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் தன் கொழுந்தியாரைக் கொலைசெய்த குற்றத்துக்காக ஜோத்பூர் நகரின் மாண்டோரில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் ஜான்வர் பகுதியில் தன் பெற்றோரிடம் வளரும் தன் குழந்தையைப் பார்ப்பதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீர்திருத்தப் பள்ளியிலிருந்து அவர் தப்பியதாகச் சொல்லப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அவர், ஜோத்பூரில் உள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்காக சாலையில் காத்திருந்தபோது குல்தீப் பிஷ்னோய் (23) எனும் மாணவன், அந்தப் பெண்ணுக்கு பேருந்து நிலையத்துக்குச் செல்ல உதவுவதாகக் கூறி தனது வாகனத்தில் லிஃப்ட் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பகுதியிலிருந்த பாலத்துக்கு அருகில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டிருக்கிறார். அந்தப் பாலத்துக்கு அருகில் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற அந்தப் பெண்ணுக்கு உதவுவதாக ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) என்பவர் அந்தப் பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்திருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை கைலானா ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சனிக்கிழமை காலை 5:30 மணியளவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இறுதியாக வீட்டுக்கு வந்த அந்தப் பெண் தனக்கு நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் மாண்டோர் காவல் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று புகார் அளித்தனர். இது தொடர்பாக மாண்டோர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மணீஷ் தேவ் , "லிஃப்ட கொடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களால் ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் பிஷ்னோய் (23) எனும் மாணவர், ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism