Election bannerElection banner
Published:Updated:

ராமநாதபுரம்: குடிபோதையில் துன்புறுத்தல்! -மாற்றுத்திறனாளி கணவனை எரித்துக் கொன்ற மனைவி

எரித்துக் கொல்லப்பட்ட முனியசாமி
எரித்துக் கொல்லப்பட்ட முனியசாமி

முனியசாமி தினமும் குடித்துவிட்டு மல்லிகாவை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் மனமுடைந்த மல்லிகா, முனியசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை அருகேயுள்ள முனுசுவலசை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முனியசாமி (வயது 42). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் மனைவி மல்லிகா. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

முனியசாமி
முனியசாமி

முனியசாமி தினமும் குடித்துவிட்டு, மல்லிகாவை அடித்துத் துன்புறுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் மனமுடைந்த மல்லிகா, முனியசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். மேலும், போலீஸார் சந்தேகமடையாமலிருக்க குடிசை வீட்டுக்கும் தீவைத்தார்.

மல்லிகா
மல்லிகா

முனியசாமி உடல் கருகியநிலையில் கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து கேணிக்கரை போலீஸார் அவர் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், முனியசாமி தினமும் போதையில் துன்புறுத்தியதால் அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றது தெரிய வந்தது. இதன்படி மல்லிகாவை கேணிக்கரை போலீஸார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு