Published:Updated:

எஸ்.பி வாட்ஸ்அப் எண்ணுக்கே ஆபாசப் படம்! -போலீஸில் சிக்கிய கோவைப் பொறியாளர்

பிரேம் கிரேண்
பிரேம் கிரேண்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்ச்சியாக ஆபாசப் படங்கள் வந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரின் பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாகக் கைதாகியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது, குறைகள் மற்றும் சமூக விரோதச் செயல் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பிரத்யேக அலைபேசி எண்ணை அறிவித்தார். அந்த எண் மூலம் வரக்கூடிய புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணின் மூலம் போதை மருந்து கடத்தல் கும்பல், பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், நிதி மோசடி ஆசாமிகள் எனப் பலரும் சிக்கியுள்ளனர்.

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார்.
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் இந்த வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்ச்சியாக ஆபாசப் படங்கள் வந்துள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸார், குறிப்பிட்ட அந்த எண்ணைக் கண்காணித்தபோது அது கோவைப் பகுதியைக் காட்டியது.

`பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!' - வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை

இதையடுத்து கோவை சென்ற ராமநாதபுரம் போலீஸார், கோவை, சரவணம்பட்டியில் உள்ள மாருதி நகரில் வசித்துவரும் பிரேம் கிரண் (27) என்பவரைக் கைது செய்தனர். இதையடுத்து அவரை ராமநாதபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஆபாசப் படங்களை தவறுதலாக அனுப்பியதாகக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் பிரேம் கிரண். இதையடுத்து போலீஸார், பொறியாளரான அவரை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

பிரேம் கிரண்
பிரேம் கிரண்

இதனிடையே கொரோனா சோதனைக்குச் சென்ற மகனைக் காணவில்லை என கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பிரேம் கிரணின் தந்தை புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையின் போது ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி-யின் புகார் எண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய புகாரில் போலீஸார் பிடித்துச் சென்றது தெரியவந்தது.

அடுத்த கட்டுரைக்கு