Published:Updated:

`ரகசிய ஏஜென்ட்... பன்றி மாந்திரீகம்!'- ஏமாற்றமடைந்த ராமேஸ்வரம் போலீஸார் #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

கடத்தல்காரர்களைப் பிடிக்கப் போன இடத்தில் பன்றி மாந்திரீகவாதிகள் இருந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TamilnaduCrimeDiary

ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதும் அங்கிருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் வேதாளைப் பகுதியிலிருந்து நாட்டுப்படகில் கஞ்சாவைக் கடத்திச்சென்ற நான்கு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.2 கிலோ தங்கக் கட்டிகள் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா கடத்தல்
கஞ்சா கடத்தல்

மத்திய, மாநிலக் கடலோரப் பாதுகாப்புப்படைகள், வருவாய்ப் புலனாய்வு என அனைத்துப் பிரிவுகளும் இப்பகுதியில் இயங்கினாலும் அனைவரது கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு கடத்தல் ஆசாமிகள் கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இவர்களைப் பிடிக்கமுடியாமல் திணறும் காவல்துறையினர், கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கக் கடலோரப் பகுதிகளில் ரகசிய ஆட்களை நியமித்துள்ளார்கள்.

அடிதடி முதல் அரிவாள் வெட்டு வரை: தேனியில் ஒரே மாதத்தில் திடுக் சம்பவங்கள்! #TamilnaduCrimeDiary

இவ்வாறு நியமிக்கப்பட்ட ஏஜென்டுகளில் ஒருவர், தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சிலர் நடமாடுவதாகச் சில நாள்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை மடக்கிப் பிடிக்க க்யூ பிரிவு போலீஸார் அரிச்சல்முனைக்குப் படையுடன் விரைந்துள்ளனர். காக்கிகளைக் கண்டவுடன் பதற்றமடைந்த அந்நபர்களை சோதனையிட்ட போலீஸார், அவர்கள் வைத்திருந்த பையினைப் பறித்துச் சோதனையிட்டனர். அந்தப் பையினுள் கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் பன்றி ஒன்று இருந்துள்ளது.

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

அதிர்ச்சியடைந்த க்யூ பிரிவு போலீஸார் அந்நபர்களை விசாரித்த போது, அவர்கள் கடத்தல்காரர்கள் இல்லை, உடல் நலம் பாதிக்கப்பட்டவரின் நலனுக்காகப் பன்றியை வைத்து மாந்திரீகம் செய்ய வந்த உள்ளூர் மாந்திரீகவாதிகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பையில் வைத்திருந்த பன்றியை அவர்களிடமே கொடுத்து, எச்சரித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இச்சம்பவம் ராமநாதபுரம் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு