Published:Updated:

ராமநாதபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... மூடி மறைக்க பார்க்கிறதா காவல்துறை?

பத்மேஷ்வரன், தினேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
பத்மேஷ்வரன், தினேஷ்குமார்

விருதுநகர்ல பட்டியல் சமூகப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்து, இப்போ சி.பி.சி.ஐ.டி விசாரணை வரை போயிருக்குது.

ராமநாதபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... மூடி மறைக்க பார்க்கிறதா காவல்துறை?

விருதுநகர்ல பட்டியல் சமூகப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்து, இப்போ சி.பி.சி.ஐ.டி விசாரணை வரை போயிருக்குது.

Published:Updated:
பத்மேஷ்வரன், தினேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
பத்மேஷ்வரன், தினேஷ்குமார்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கடற்கரைப் பகுதியில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த காதலர்களை ஒரு கும்பல் தாக்கி, அவர்களிடமிருந்த நகையை, செல்போனைப் பறித்ததோடு, அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளிவந்து சட்டசபை வரை விவாதம் ஆனதால், சாயல்குடிச் சம்பவத்தைச் சாதாரண வழிப்பறி வழக்காக, காவல்துறை மூடி மறைக்கப் பார்க்கிறது என்று புகார் எழுந்திருக்கிறது. “தனிமையில் மாட்டிக்கொள்ளும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்திருக்கும், அந்தக் கொடூரக் கும்பலைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அவர்கள்மீது சாதாரண வழக்குகளைப் பதிவுசெய்து தப்பிக்கவிடக் கூடாது” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!

ராமநாதபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... மூடி மறைக்க பார்க்கிறதா காவல்துறை?

சில தினங்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, ‘நான் என் காதலியுடன் சாயல்குடிக்குச் சென்றேன். கடற்கரைப் பகுதியில் நாங்கள் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, கஞ்சா போதையில் வந்த சில இளைஞர்கள் எங்களை மிரட்டி, நகை மற்றும் செல்போன்களைப் பறித்தார்கள். பிறகு, என் கண்முன்னே என் காதலியைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அதை வீடியோவாகவும் எடுத்தார்கள். அதனால்தான் நான் தற்கொலை செய்ய முயன்றேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். விசாரணை செய்த போலீஸ் மூலம் இந்த விஷயம் வெளியே வர, மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பரபரப்பானது. அதற்குப் பிறகு என்ன நடந்ததோ, போலீஸ் கப்சிப் ஆகிவிட்டது.

இளைஞரின் தற்கொலை முயற்சி நடந்து மூன்று நாள்கள் கழித்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணும் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைப் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மருத்துவமனையில், மாஜிஸ்ட்ரேட்டிடம் தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். ஆனாலும் அந்தப் பெண்ணின் வீட்டார், ‘எங்கள் பெண்ணின் மானம் போய்விடும். பாலியல்ரீதியான கம்ப்ளெயின்ட் எதுவும் வேண்டாம்’ என்று சொல்ல, அதைச் சாதகமாக்கிக்கொண்டு விஷயம் வெளிவராமல் போலீஸ் பார்த்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, சம்பந்தப்பட்ட இளைஞரையும் போலீஸ் மிரட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். காதலர்கள் இருவரும் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்துவிட்டார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவர்களிடம் மீடியாக்களைப் பேசவிடாமல் பார்த்துக்கொண்ட போலீஸார், அவர்களைப் பற்றிய விவரங்களைத் தரவும் மறுத்துவிட்டார்கள்.

ராமநாதபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... மூடி மறைக்க பார்க்கிறதா காவல்துறை?

இது குறித்து நமக்குத் தெரிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். ‘‘அருப்புக்கோட்டையில தற்கொலைக்கு முயற்சி பண்ணின ஒரு பையன் கொடுத்த வாக்குமூலத்தை வெச்சுத்தான் விசாரணையை ஆரம்பிச்சோம். காதலியோட தனியா இருந்த அந்தப் பையனை மிரட்டி பணம், நகை, செல்போன்களை ஒரு கும்பல் பறிச்சுக்கிட்டதா தகவல் தெரியவும், அந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரைவெச்சு விசாரணை செஞ்சுக்கிட்டிருந்தோம். அந்தச் சமயத்துல திருப்பூர்ல நடந்த வாகனச் சோதனையில, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த அஜித்-னு ஒரு பையன் சிக்கியிருக்கார். அவரோட செல்போன்ல, கும்பலா பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் ஏழெட்டு இருந்திருக்கு. அஜித்தை செக்யூர் பண்ணிட்டு அந்த வீடியோவுல இருந்த இளைஞர்களையும் பிடிச்சு விசாரணை செஞ்சோம். அந்தக் கும்பல், சாயல்குடி, கமுதி, வாலிநோக்கம், பெருங்கரணை கடற்கரைப் பகுதிகளுக்குத் தனியா வருகிற ஜோடிகளை மிரட்டி நகைகள்‌ மற்றும் செல்போன்களைப் பறிக்கிறதை வழக்கமா வெச்சுருக்கறது தெரியவந்தது. அதோட, கும்பலாச் சேர்ந்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செஞ்சதும் தெரியவந்திருக்கு’’ என்றார்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தும் வெளியே கசிந்துவிட்ட நிலையில், ‘தீவிர விசாரணை நடத்திவந்த போலீஸார், ஏன் சட்டென அமைதியாகிவிட்டார்கள்?’ என நமக்கு நெருக்கமான போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘விருதுநகர்ல பட்டியல் சமூகப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்து, இப்போ சி.பி.சி.ஐ.டி விசாரணை வரை போயிருக்குது. அந்த வழக்கே முடியாத நிலையில, இந்த விவகாரமும் வெளிவந்தா, எதிர்க்கட்சிகள் அதைப் பெரிதாக்கி விமர்சனம் செய்வார்கள் என்பதால், மேலிடத்து உத்தரவுகளால இந்த வழக்கைச் சாதாரண வழிப்பறி வழக்கா முடிச்சுட்டாங்க. ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண், மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீண்டும் விசாரணை செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம்.” என்றனர்.

ராமநாதபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... மூடி மறைக்க பார்க்கிறதா காவல்துறை?

கைதுசெய்யப்பட்ட அஜித், பத்மேஷ்வரன், தினேஷ்குமார் ஆகியோர்மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை, கடுமையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக்கிடம் கேட்டபோது, ‘‘பாலியல் வன்கொடுமை நடந்ததாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. வழிப்பறி செய்ததாகப் புகார் வந்துள்ளது. அதைவைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். விருதுநகர் மாவட்ட போலீஸாரிடம், விஷம் குடித்த கல்லூரி மாணவரிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அந்த அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் வீட்டார் உட்பட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட எந்தப் பெண் தரப்பிலிருந்தும் இதுவரை பாலியல் புகார் தரப்படவில்லை’ என்பதை ஒரு காரணமாகச் சொல்லி இந்த வழக்கில் போலீஸ் அலட்சியமாக நடந்துகொள்ளக் கூடாது. குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பின்னணி பதைபதைக்கச் செய்யுமளவுக்கு இருக்கிறது. தீர விசாரித்து, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்த வேண்டும்!