Published:Updated:

கவர்ச்சி விளம்பரம், ஆன்லைன் டெலிவரியில் கிழிந்த சேலை; மோசடியில் ஒரு லட்சத்தை இழந்த பெண்!

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்

பார்சலை ஆர்வமாக திறந்து பார்த்த செல்வி, பெரும் அதிர்ச்சியடைந்தார். பார்சலில் அவர் ஆர்டர் செய்த சேலையன்றி, பழைய, அதுவும் கிழிந்த சேலை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பார்சலை திருப்பி அனுப்புவதற்காக சம்பந்தப்பட்ட இணையதளத்திற்குள் சென்று customer care number-ஐ தேடியுள்ளார்.

கவர்ச்சி விளம்பரம், ஆன்லைன் டெலிவரியில் கிழிந்த சேலை; மோசடியில் ஒரு லட்சத்தை இழந்த பெண்!

பார்சலை ஆர்வமாக திறந்து பார்த்த செல்வி, பெரும் அதிர்ச்சியடைந்தார். பார்சலில் அவர் ஆர்டர் செய்த சேலையன்றி, பழைய, அதுவும் கிழிந்த சேலை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பார்சலை திருப்பி அனுப்புவதற்காக சம்பந்தப்பட்ட இணையதளத்திற்குள் சென்று customer care number-ஐ தேடியுள்ளார்.

Published:Updated:
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி செல்வி. இவர் தற்போது ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அரசு போட்டி தேர்வுக்கு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி செல்போனில் தனது முகநூல் பக்கத்தை பார்த்துள்ளார் செல்வி. அதில் Faparrival என்ற இணையதளத்தில் விதவிதமான கண்ணை கவரும் வகையிலான சேலைகள் உள்ளதாக, சேலை மாடல்களுடன் விளம்பரங்கள் வந்துள்ளன.

இதையடுத்து தனது செல்போனில் google chromeக்குள் சென்று www.Faparrival.com என்ற இணையதளத்திற்குள் சென்று, அதில் குறைந்த விலையில் அழகழகான டிசைன்களில் இருந்த சேலைகளில் ரூ.799 மதிப்புள்ள சேலையை cash on delivery மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஐந்து நாள்களுக்கு பிறகு தனியார் கொரியர் கம்பெனியில் இருந்து அவர் ஆர்டர் செய்த சேலை பார்சலில் வந்துள்ளது. கொரியர் கொண்டு வந்த நபரிடம் சேலைக்கான பணம் ரூ.799-ஐ கொடுத்து விட்டு பார்சலை வாங்கியுள்ளார்.

Saree
Saree

பின்னர் வீட்டிற்குச் சென்று பார்சலை ஆர்வமாக திறந்து பார்த்த செல்வி, பெரும் அதிர்ச்சியடைந்தார். பார்சலில் அவர் ஆர்டர் செய்த சேலையன்றி, பழைய, அதுவும் கிழிந்த சேலை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பார்சலை திருப்பி அனுப்புவதற்காக Faparrival இணையதளத்திற்குள் சென்று customer care number-ஐ தேடியுள்ளார். அதில் கிடைக்கப்பெற்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட செல்வி, தனக்கு அனுப்பப்பட்ட சேலை பழைய, கிழிந்த சேலை என்றும், அதனை திரும்ப பெற்றுக்கொண்டு பணத்தை அனுப்பும்படியும் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ’பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறோம், பின்னர் சேலையை கொரியர் கொண்டு வந்தவரே, திரும்ப வாங்கிச் செல்வார்’ என கூறிவிட்டு, 'Anydesk’ என்ற‌ அப்ளிகேஷனை செல்போனில் இன்ஸ்டால் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ளார். அதன்படி தான் வாங்கிய சேலையின் விவரங்கள், தனது இரு வங்கிக் கணக்கு எண்கள், யு.பி.ஐ. பின் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்துள்ளார் செல்வி.

காவல் நிலையம்
காவல் நிலையம்

சிறிது நேரத்திலேயே அவருடைய இரண்டு வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.1 லட்சத்து 2,500 எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அந்த செல்போன் எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச்டு ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட செல்வி, இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் பேசினோம்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி
Representational Image

‘’ஆன்லைன் மூலம் வரும் கவர்ச்சி விளம்பரங்களை பார்த்து ஏராளமானோர் ஏமாந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை கவரும் வகையிலான சேலை, மாடர்ன் உடைகள், காஸ்மெட்டிக்ஸ் பொருள்களை கவர்ச்சியாகக் காட்டி அவர்கள் ஆசையை தூண்டி அதனை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தோன்ற வைக்கின்றனர். பொருள்களை வாங்கிய பிறகுதான் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதையே தெரிந்து கொள்கிறார்கள். ஆசிரியர் செல்வியும் அதே போல் தான் ஏமாற்றப்பட்டுள்ளார். ஆனால் அதனை அறியாமல் மீண்டும் அந்த மோசடி கும்பலிடம் தானாக முன்வந்து பணத்தையும் பறி கொடுத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியில் மோசடி செய்யும் இந்த கும்பலை பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அவர்கள் எங்கிருந்து இதனை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இருந்தாலும் முயன்று வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.