Published:Updated:

கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக திரண்ட ஊர்மக்கள்; சிறைபிடிக்கப்பட்ட போலீஸ்!- சினிமாவை மிஞ்சிய க்ரைம் சீன்

சிறைபிடிக்கப்பட்ட போலீஸ்

கடல் அட்டைகள் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸார், ஊர்மக்களால் சிறைபிடிக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக திரண்ட ஊர்மக்கள்; சிறைபிடிக்கப்பட்ட போலீஸ்!- சினிமாவை மிஞ்சிய க்ரைம் சீன்

கடல் அட்டைகள் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸார், ஊர்மக்களால் சிறைபிடிக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிறைபிடிக்கப்பட்ட போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமேஸ்வரம், தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பிடித்து இலங்கைக்குக் கடல் வழியாக கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. ஆனால் கடல் அட்டைகளை கடத்திச் செல்லும் கும்பலைப் பிடிக்கச் செல்லும் போலீஸாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

அதுபோன்ற சினிமாவை மிஞ்சும் வகையிலான சம்பவம் இன்று மண்டபம் பகுதியில் கடல் அட்டைகள் கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற போலீஸாருக்கு அரங்கேறியிருக்கிறது.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்
உ.பாண்டி

ராமேஸ்வரம் மரைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், காவலர்கள் சரவணகுமார், சிவசுப்பிரமணியன், குமார், தர்மராஜ் ஆகியோர் ராமேஸ்வரத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைவரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் மண்டபம் அருகே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த சரக்கு வாகனம் இவர்கள் நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தை, காரில் விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது அருகில் சென்ற போலீஸாரின் காரை இடித்து மோதிவிட்டு சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் அவரை விடாமல் போலீஸாரும் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர். அந்த சரக்கு வாகனம் மண்டபத்திற்கும் உச்சிப்புளிக்கும் இடையில் உள்ள ஊருக்குள் நுழைந்துள்ளது. விடாமல் துரத்திச் சென்ற மரைன் போலீஸார் சரக்கு வாகனத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் வாகனத்தைவிட்டு கீழே இறங்கி போலீஸார் துரத்திக் கொண்டு வருவதாக சத்தம் போட்டுக்கொண்டு ஓடியுள்ளார். அந்த நபரை சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விரட்டிச் சென்று பிடித்துள்ளார். பின்னர் அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சாக்கு மூட்டைகளில் பல கோடி மதிப்பிலான இரண்டு டன் கடல் அட்டைகள் கடத்திச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடத்தப்படும் கடல் அட்டைகள்
கடத்தப்படும் கடல் அட்டைகள்

இது தொடர்பாக அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரைக்காயர் என்பவருக்கு கடல் அட்டைகளை கடத்திச் செல்வதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைதுசெய்து, கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீஸாரை சூழ்ந்து, ``கடல் அட்டைகளையும், கைதுசெய்த வாலிபரை விடவில்லை என்றால் உங்களைக் கொலைசெய்து, மீட்டுக்கொண்டு செல்வோம்" என மிரட்டியுள்ளனர். அதற்கு மசியாத போலீஸார், ``எங்களைத் தடுத்தால் உங்களையும் கைதுசெய்வோம்" எனக் கூறியுள்ளனர்.

மண்டபம் காவல் நிலையம்
மண்டபம் காவல் நிலையம்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸாரை சரமாரியாகத் தாக்கி, அவர்களின் காரின் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் கைதுசெய்த வாலிபரையும் கடல் அட்டைகளையும் போலீஸாரிடமிருந்து மீட்டுக்கொண்டு, போலீஸார் பின் தொடராமல் இருக்க தங்கள் வீட்டுப் பெண்களை கொண்டு போலீஸார் பின் தொடராமல் இருக்கும் வகையில் சிறை பிடித்துள்ளனர்.

நீண்ட நேரம் அவர்கள் வெளியில் செல்லாதவாறு பிடித்து வைத்திருந்த அந்தப் பெண்கள், ``இனி கடல் அட்டை கடத்தலை தடுப்பதாகக் கூறி ஊருக்குள் நுழைந்தால் உயிரோடு விடமாட்டோம்!" என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்

இது குறித்து ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உத்தரவின் பேரில் மண்டபம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மரைன் போலீஸாரை மீட்டுள்ளனர். மரைன் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மண்டபம் காவல் நிலையத்தில் தங்களைத் தாக்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த நஜீம், மரக்காயர் என்கிற சையது காசிம் அவர் மகன் ரியாஸ் அகமது, ஹமீது ராஜா என்கிற ராஜா முகமது ஆகியோர்மீது புகார் அளித்தார்.

பின்னர் படுகாயமடைந்த காவலர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக ஒரு ஊரே துணை நிற்பது போலீஸாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.