Published:Updated:

ஃபேஸ்புக்கில் 4 போலிக் கணக்குகள்; மார்ஃபிங்;பணம் பறிப்பு!-அதிர்ச்சி கொடுத்த பரமக்குடி கல்லூரி மாணவர்

Representational Image
Representational Image

ஃபேஸ்புக்கில் 4 போலியான கணக்குகளைப் பயன்படுத்தி அதில் 2 கணக்குகள் மூலம் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்ததுடன் அவற்றை அப்பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளான்.

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக வெளியிட்டதுடன், அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்ட கல்லூரி மாணவரை பரமக்குடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சைபர் க்ரைம் - போலீஸ் புகார்
சைபர் க்ரைம் - போலீஸ் புகார்
Representational Image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் புகார்கள், தகவல்கள் அளிக்க ஏதுவாக தனி தொடர்பு எண் (94899 19722) ஏற்படுத்தியுள்ளார். இந்த எண்ணைத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தனது மனைவியின் போலியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டிருப்பதுடன், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், பணம் தரவில்லை எனில் சமூக வலைதளங்களில் அதனைப் பரப்பிவிடுவதாக மிரட்டுவதாகவும் புகாரளித்தார்.

எஸ்.பி வருண்குமார்
எஸ்.பி வருண்குமார்
உ.பாண்டி

இதையடுத்து எஸ்.பி வருண்குமாரின் உத்தரவின்படி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டு இப்புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித் (19) என்பவர் சிக்கினார். கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணிப்பொறியியல் முதலாம் ஆண்டு மாணவரான இவரிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.

ஃபேஸ்புக்கில் 4 போலியான கணக்குகளைப் பயன்படுத்தி அதில் 2 கணக்குகள் மூலம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து வந்தது தெரியவந்தது. அந்தப் படங்களை அப்பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலிலும் ரோகித் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பெண்களை மிரட்டிய மாணவன் ரோஹித்
பெண்களை மிரட்டிய மாணவன் ரோஹித்
உ.பாண்டி

இதனை தொடர்ந்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் பல ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ரோகித் மீது வழக்கு பதிவு செய்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர். இதே போன்று இன்ஸ்டாகிராம் செயலியில் போலியான கணக்குகள் உருவாக்கி அதன் தொடர்பில் உள்ள பெண்களை மிரட்டிய புகார் ஒன்றில் உச்சிப்புளி புதுமடம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு