Published:Updated:

ராமநாதபுரம்: `ரூ.6 கோடி; 40 நாள்களில் இரு மடங்கு!’ - இரிடியம் மோசடியில் ஏமாந்த கரூர் நபர்

ராமநாதபுரம்
News
ராமநாதபுரம்

`விமானங்கள் பறக்கும்போது கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப் பொருத்தப்படும் உயர்ரக உலோகமான இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும், அதை வாங்கி முதலீடு செய்தால் 40 நாள்களில் இரு மடங்கு தொகை கிடைக்கும்’ எனவும் ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார்.

விமான உதிரி பாகத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி, கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த நபரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் நான்கு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இரிடியம் மோசடி யில் ஈடுபட்ட வீரபாகு
இரிடியம் மோசடி யில் ஈடுபட்ட வீரபாகு
உ.பாண்டி

கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரின் நண்பர் ரமேஷ் என்பவர் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரபாகு என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பிறகு, ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மதன்குமாரைத் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது, விமானங்களைக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் ரேடியம் அடங்கிய உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தென் பிராந்திய மேலாளராக வேலை பார்ப்பதாகவும், அதன் தலைமையகம் லண்டனில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், விமானங்கள் பறக்கும்போது கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப் பொருத்தப்படும் உயர்ரக உலோகமான இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும், அதை வாங்கி முதலீடு செய்தால் 40 நாள்களில் இரு மடங்கு தொகை கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார். அதை மதன்குமார் நம்பிய நிலையில், அவரிடம் வீரபாகு, முனியசாமி, சுகுமார், பாஸ்கரன், கணபதி ஆகியோர் இரிடியம் வாங்குவதற்காக ரூ.6 கோடி கேட்டிருக்கிறார்கள். அதன்படி கடந்த 2015, பிப்ரவரி தொடங்கி சில தவணைகளில் ரூ.6 கோடியை முனியசாமி உள்ளிட்டோரிடம் மதன்குமார் கொடுத்துள்ளார்.

முனியசாமி
முனியசாமி
உ.பாண்டி

பணத்தைப் பெற்றுக்கொண்ட இந்தக் கும்பல் பல ஆண்டுகளாகியும் இரிடியம் உள்ள பாகத்தை மதன்குமாரிடம் கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதன்குமார், ராமநாதபுரம் வந்து பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், இரிடிய மோசடிக் கும்பலோ பணத்தைத் தர மறுத்ததுடன், மதன்குமார்மீது காரை ஏற்றிக் கொன்றுவிடுவோம் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இருடியம் மோசடியில் ஈடுபட்டவர்கள்
இருடியம் மோசடியில் ஈடுபட்டவர்கள்
உ.பாண்டி

இதனால் பயந்துபோன மதன்குமார், இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமாரிடம் புகாரளித்தார். எஸ்.பி அறிவுறுத்தல்படி ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, ராமநாதபுரம் அரண்மனை மேற்குத் தெரு சுகுமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியிருக்கும் இரிடிய மோசடிக் கும்பலை சேர்ந்த வீரபாகு, முனியசாமி, பாஸ்கரன், கணபதி ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.