Published:Updated:

ராணிப்பேட்டை: `ஏழை விவசாயியிடம் லஞ்சம் கேட்டு கறார்!’ -மின்வாரிய அதிகாரி கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்
உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்

ஏழை விவசாயியிடம், லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷி என்ற விவசாயி, தட்கல் முறையில் தன்னுடைய விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்புக் கேட்டு கார்ணாம்பட்டு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் (53) என்பவர் ரிஷிகேஷியிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

உதவி செயற்பொறியாளர் அலுவலகம்
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்

`நானே ஏழை விவசாயி, அவ்வளவுப் பணம் தன்னிடம் இல்லை’ என்று ரிஷிகேஷி தெரிவித்தும், `இறுதியாக 7,000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்’ என்று உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார். இதுகுறித்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் விவசாயி ரிஷிகேஷி புகார் அளித்தார். போலீஸாரும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரிஷிகேஷியிடம் கொடுத்து அனுப்பினர்.

`அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்!’ - நீதிபதிகள் வேதனை

அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் இன்று காலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனைச் சந்தித்து கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடன், அந்தப் பணத்தை வாங்கிய கார்த்திகேயனை, ஏற்கெனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரது கை விரல் ரேகைகள் பதிந்த அந்த ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றினர்.

உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்
உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்

இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். விசாரணைக்குப் பின்னர், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு