Published:Updated:

சிறார் வதை வழக்கு: 30 நாள்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய குஜராத் போக்ஸோ நீதிமன்றம்!

தொடர்ந்து 30 நாள்களாக இரவும், பகலுமாக நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் முதன்முறையாக ஒரு சிறப்பு நீதிமன்றம் குற்றம் நடந்து 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமியை சிறார் வதை செய்த வழக்கில், அஜய் நிஷாத் என்ற வாலிபருக்கு, குற்றம் நடந்து 30 நாள்களில் ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சூரத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sexual Abuse (Representational Image)
Sexual Abuse (Representational Image)
`என் மகளுக்கு இந்த நிலை வந்திருந்தால்..!' -கோவை மாணவி பெற்றோரிடம் உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி குஜராத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியில், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயதுச் சிறுமியை கடத்தி சிறார் வதை செய்துள்ளார், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அஜய் நிஷாத்.

இதனையடுத்து அடுத்த நாளான அக்டோபர் 13-ம் தேதி அவரை கைது செய்த காவல்துறையினர், அடுத்த 10 நாள்களில் சூரத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து 30 நாள்களாக இரவும், பகலுமாக நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash
`அந்தக் கடிதத்தில் உள்ளவர்கள்தான் அடுத்த டார்கெட்!’ -கோவை மாணவி வழக்கில் போலீஸ் ஸ்கெட்ச்

குஜராத்தில் முதன்முறையாக ஒரு சிறப்பு நீதிமன்றம் குற்றம் நடந்து 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு