Published:Updated:

`அருள்வாக்கு சொல்வார்.. அவர் எனக்கு சாமி மாதிரி!' - முறைதவறிய நட்பால் கொலைவழக்கில் சிக்கிய மருமகன்

குணசுந்தரி
குணசுந்தரி

`நான், காதலித்தபோது அத்தை குணசுந்தரி எனக்கு ஆதரவாக இருந்தார். மேலும் அவர்தான் எனக்கு சாமி' என போலீஸாரிடம் கொலை வழக்கில் கைதான கணேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை திரு.வி.க.நகர் கென்னடி ஸ்கொயர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியான். இவரின் 4-வது மகன் ராஜன் (39). இவர், கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட விலாசத்தில் என் மனைவி தரணி, மகன்களுடன் வாடகை வீட்டில் ஒன்றரை ஆண்டுகளாக வசித்துவருகிறேன். நான் ஆட்டோ ஓட்டிவருகிறேன். எனக்கு சந்திரசேகர், கதிர்வேல் என்ற இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு தம்பி. மூத்த அண்ணன் சந்திரசேகர், 22 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவருக்கு கணேஷ் என்கிற கணேசன் என்ற மகனும் அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர்.

`முறை தவறிய நட்பு; மருமகனைத் தட்டிக் கேட்ட அத்தை!' -கொலையில் முடிந்த சென்னைக் கொடூரம்

என்னுடைய அக்கா சாந்தகுமாரி. தங்கை குணசுந்தரி (37). இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் நடந்தது. அழகுக்கலை நிபுணராகவும் குணசுந்தரி இருந்தார். கடைசி தம்பி லோகநாதன், கார் ஓட்டி வந்தவர், கடந்த 6 மாதம் முன்பு இறந்துவிட்டார். அவரின் மனைவி தீபா. எனது மூத்த அண்ணன் சந்திரசேகரின் மகன் கணேஷின் மனைவி செல்வி. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு கணேஷைவிட்டு செல்வி பிரிந்து சென்றுவிட்டார்.

தம்பி லோகநாதன் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி தீபாவுக்கும் கணேஷுக்கும் பழக்கம் இருந்து வந்தது. கணேஷ் தீபாவுடன் கொளத்தூர் பாலாஜி நகர் மெயின்ரோடு பாரதி நகரில் வாழ்க்கை நடத்திவந்தார். கடந்த 2 வாரமாக மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகின்றனர். கணேஷுக்கு எனது தங்கை குணசுந்தரி அவசரத் தேவைக்குப் பணம் கொடுத்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். போன வாரம் குணசுந்தரி, கணேஷ் வீட்டுக்கு வந்து, `என் தம்பி மனைவியை கூட்டிவந்து வைத்துள்ளாயே நியாயமா.. நான் உனக்கு லவ் மேரேஜ் செய்துவைத்தேன். ஆனால், நீ அவளை விவகாரத்து செய்துவிட்டு இப்படி சித்தியுடன் வாழ்கின்றாயே?' என்று கோபத்தில் கேட்டுச் சென்றுள்ளார்.

கணேஷ், குணசுந்தரி
கணேஷ், குணசுந்தரி
முனீஸ்வரன் சாமியை குணசுந்தரி கும்பிடுவார். அதனால் அடிக்கடி அருள்வாக்கு கூறுவார். குணசுந்தரியின் சிஷ்யனாக கணேஷ் இருந்துள்ளார். அதனால் அத்தை குணசுந்தரியை கணேஷ், தன்னுடைய சாமியாக கருதிவந்துள்ளார்.
போலீஸ் அதிகாரி

15.5.2020-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு என் அக்கா சாந்தகுமாரி, போன் செய்து என் தங்கை குணசுந்தரியுடன் பேசியுள்ளார். பின்னர் குணசுந்தரி, கொளத்தூரில் உள்ள கணேஷ் வீட்டுக்கு வந்து தீபா குறித்து பேசியபோது கணேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்தச் சமயத்தில் நான், குணசுந்தரிக்குப் போன் செய்தபோது அந்த போனை டிரைவர் உமாசங்கர் எடுத்துப் பேசினார். அப்போது உமாசங்கர், கணேஷுக்கும் குணசுந்தரிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், குணசுந்தரியை கணேஷ், கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாகவும் போனில் கூறினார்.

உடனே நான், ஆட்டோவை எடுத்துக்கொண்டு கணேஷ் வீட்டுக்குச் சென்றேன். அங்கு என் அக்கா சாந்தகுமாரி, கணேஷின் தங்கை அர்ச்சனா, அர்ச்சனாவின் கணவர் சக்திவேல் மற்றும் அங்கு இருந்தவர்கள் உதவியுடன் குணசுந்தரியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது குணசுந்தரி கத்தியால் குத்தப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அவரின் பின் தலை, பின்பக்க கழுத்து, வலது பக்க முதுகு, இடது பக்க வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன.

``குடும்பத்தின் ஆலமரம்; நிம்மதியாக வாழவிடல!" - மருமகனால் கொல்லப்பட்ட அத்தை
கணேஷ்
கணேஷ்

குணசுந்தரியை பெரியார் நகர் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர் குணசுந்தரி இறந்துவிட்டதாகக் கூறினர். நான் இதுசம்பந்தமாக கொளத்தூர் காவல் நிலையம் வந்து தங்கை குணசுந்தரியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணேஷ் என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அகஸ்டின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் வழக்கு பதிந்து கணேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் கூறுகையில், ``அத்தை குணசுந்தரியைக் கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிள் மூலம் வேலூருக்குச் சென்றுள்ளார் கணேஷ். ஊரடங்கு நேரத்தில் அவர் காவல்துறையினரிடம் வாகனச் சோதனையிலும் செக்போஸ்ட்களிலும் சிக்காமல் சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. கணேஷை கைது செய்து விசாரித்தபோது, `அப்பா சந்திரசேகர் இறந்தபிறகு என்னுடைய அத்தை குணசுந்தரிதான் என் மீது அன்பாகவும் எனக்கு ஆறுதலாகவும் இருந்தார்.

கணேஷ்
கணேஷ்

என்னை வளர்த்தது அவர்தான். குணசுந்தரி அத்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் செல்வியை லவ் பண்ணிய தகவல் தெரிந்ததும் அவளை எனக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தது அத்தை குணசுந்தரிதான். தீபா சித்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்ததும் அத்தை குணசுந்தரி என்னைக் கண்டித்தார். தீபாவிடமும் பேசிப்பார்த்தார். ஆனால், நாங்கள் கேட்கவில்லை. அத்தையை என் கையால் கொலை செய்வேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை' என்று கண்ணீர்மல்க கூறினார்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``முனீஸ்வரன் சாமியை குணசுந்தரி கும்பிடுவார். அதனால் அடிக்கடி அருள்வாக்கு கூறுவார். குணசுந்தரியின் சிஷ்யனாக கணேஷ் இருந்துள்ளார். அதனால் அத்தை குணசுந்தரியை கணேஷ், தன்னுடைய சாமியாக கருதிவந்துள்ளார். சம்பவத்தன்று குணசுந்தரிக்கும் கணேஷுக்கும் தகராறு ஏற்பட்டபோது கத்தியை எடுத்துள்ளார். அதைப் பார்த்த தீபா, கணேஷிடமிருந்த கத்தியைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார். ஆனால், கணேஷ், அத்தை என்றுகூட பாராமல் குணசுந்தரியை குத்தியுள்ளார்.

கொலை
கொலை

அதைப்பார்த்த தீபா, வெளியில் நின்றுகொண்டிருந்த கார் டிரைவர் உமாசங்கரை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து கணேஷைப் பிடித்துக்கொண்டு குணசுந்தரியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது திடீரென ஆக்ரோஷமான கணேஷ், குணசுந்தரியைக் கொலை செய்துள்ளார்.

பின்னர், போலீஸாரிடம் சிக்காமலிருக்க வீட்டிலிருந்து ஓட்டம்பிடித்துள்ளார். அதனால்தான் இந்த வழக்கில் தீபா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு