Published:Updated:

சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்... கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!

சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!

செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினரான கட்டை பாஸ்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்... கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!

செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினரான கட்டை பாஸ்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது!

செம்மரக்கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் பாஸ்கர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் சென்னையில் நடத்திவரும் ஃபர்னிச்சர் கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, செம்மரம் கடத்தியது தொடர்பாக பாஸ்கரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

யார் இந்த பாஸ்கர்?

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன். இவரின் மனைவி இளவரசி. இந்தத் தம்பதியின் மகன் விவேக் ஜெயராமன். இவர் தனியார் தொலைக்காட்சி, சினிமா தியேட்டர் பிசினஸ்களைச் செய்துவருகிறார். இளவரசியும், விவேக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் சசிகலாவோடு குடியிருந்தவர்கள்.

சசிகலா
சசிகலா

விவேக், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் கீர்த்தனாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு அப்போது ஜெயலலிதா செல்லவில்லை. அதற்கு விவேக்கின் மாமனார் பாஸ்கர் மீது ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையிலிருந்தது காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், பாஸ்கரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது ரூ,48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்திருக்கின்றனர். விசாரணைக்குப்பிறகு கைதுசெய்யப்பட்ட பாஸ்கர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சசிகலாவின் உறவினர் பாஸ்கரை கட்டை பாஸ்கர் என்றே சிலர் அழைப்பதுண்டு. அவர் கைதுசெய்யப்பட்ட தகவல் சசிகலா குடும்பத்தினரிடைய பரபரப்பாகப் பேசப்படுகிறது.