Published:Updated:

மும்பை: திருமணத்துக்கு முன்பு கர்ப்பம்; கழிவறையில் குழந்தை பெற்று, ஜன்னல் வழியே போட்ட இளம்பெண்!

குழந்தை போடப்பட்ட கட்டடம்

மும்பையில் திருமணத்துக்கு முன்பு கருவுற்று கழிவறையில் குழந்தை பெற்று அதை ஜன்னல் வழியாக வெளியில் போட்ட பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மும்பை: திருமணத்துக்கு முன்பு கர்ப்பம்; கழிவறையில் குழந்தை பெற்று, ஜன்னல் வழியே போட்ட இளம்பெண்!

மும்பையில் திருமணத்துக்கு முன்பு கருவுற்று கழிவறையில் குழந்தை பெற்று அதை ஜன்னல் வழியாக வெளியில் போட்ட பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
குழந்தை போடப்பட்ட கட்டடம்

மும்பை அருகேயுள்ள நவிமும்பை உல்வே என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்துக்கு கீழே, பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்று கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையை மருத்துவமனையில் சோதித்தபோது அது ஏற்கெனவே இறந்திருந்தது. குழந்தை கிடந்த கட்டடத்தில் இருப்பவர்களிடம் `குழந்தை யாருக்குச் சொந்தம்’ என்று விசாரித்தனர். ஆனால், சரியான தகவல் கிடைக்கவில்லை.

மும்பை: திருமணத்துக்கு முன்பு கர்ப்பம்; கழிவறையில் குழந்தை பெற்று, ஜன்னல் வழியே போட்ட இளம்பெண்!

கட்டடத்துக்கு வெளியிலிருந்து பார்த்தபோது இரண்டாவது மாடியில் ஒரு வீட்டில் கழிவறை ஜன்னலில் கிரில் போடாமல் இருந்தது. உடனே அந்த வீட்டிலிருந்து குழந்தை கீழே போடப்பட்டிருக்கலாம் என்று கருதி அங்கு சென்று போலீஸார் விசாரித்தனர். வீட்டில் இருந்தவர், வீட்டில் எனது சகோதரரின் 19 வயது மகளும் தங்கி இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு வயிற்றுவலி வந்ததாகவும், உள்ளூர் கிளீனிக்குக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார். அன்று இரவு திடீரென கழிவறைக்குச் சென்ற அப்பெண் வயிற்றுவலியால் உள்ளிருந்து அழுதார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிக்கச் சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆட்டோவுடன் வீட்டுக்கு வந்தபோது அப்பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அதோடு தனக்கு வயிற்றுவலி சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். உடனே, அப்பெண்ணிடம் பெண் கான்ஸ்டபிள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தன்னுடைய பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதால் கர்ப்பமாகிவிட்டதாகத் தெரிவித்தார். அதோடு எட்டு மாதம் ஆன பிறகு வயிறு பெரியதாகத் தெரியாத காரணத்தால் இது குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது தங்கியிருந்த தன்னுடைய பெரியப்பா வீட்டிலோ சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

கைது
கைது

இரவு நேரத்தில் கழிவறையில் குழந்தை பிறந்ததால் அதை மறைக்க ஜன்னல் வழியாக அதை வெளியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கைதுசெய்யப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.