Published:Updated:

`ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு?!’ - பிரேக்அப் ஆன 15 நாள்களில் தற்கொலை செய்துகொண்ட டி.வி நடிகை

துனிஷாவுடன் மொகமத் கான்

ஒரே நேரத்தில் காதலன், பல பெண்களுடன் தொடர்புவைத்திருந்ததால் டி.வி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

`ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு?!’ - பிரேக்அப் ஆன 15 நாள்களில் தற்கொலை செய்துகொண்ட டி.வி நடிகை

ஒரே நேரத்தில் காதலன், பல பெண்களுடன் தொடர்புவைத்திருந்ததால் டி.வி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
துனிஷாவுடன் மொகமத் கான்

மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு டி.வி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டார். படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது மதிய உணவு இடைவேளையில் சக நடிகரும், காதலனுமான சீசம் மொகமத் கான் மேக்கப் அறையில் இருந்த வாஷ் ரூமில் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை டி.வி துறையில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் விசாரணையில், துனிஷாவும், சீசன் மொகமத் கானும் காதலித்துவந்திருக்கின்றனர். அவர்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் பிரேக்அப் செய்துகொண்டனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மொகமத் கான் நேற்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மொகமத் கானுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது.

`ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு?!’ - பிரேக்அப் ஆன 15 நாள்களில் தற்கொலை செய்துகொண்ட டி.வி நடிகை

அதனால்தான் துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டதாக துனிஷாவின் மாமா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பவன் சர்மா கூறுகையில், `துனிஷாவின் தற்கொலையால் குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். துனிஷா உயிரோடு இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. துனிஷா தன் தாயாருடன் வசித்துவந்தார். போலீஸார்மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். துனிஷாவுடன் தொடர்பில் இருக்கும்போதே மொகமத் கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இதனால் துனிஷா மன அழுத்தத்துக்கு ஆளானார். டிசம்பர் 16-ம் தேதி மொகமத் கான் தன்னை ஏமாற்றுவது துனிஷாவுக்குத் தெரியவந்தது. துனிஷாவின் தாயாரும் மொகமத் கானிடம் பேசினார். ஏன் நெருக்கமாகப் பழகிவிட்டு திடீரென விலகிச்செல்கிறாய் என்று கேட்டார்’ என்று தெரிவித்தார்.

துனிஷா தற்கொலை செய்துகொண்டபோது கர்ப்பமாக இருப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்று தெரியவந்தது. அவரின் உடல் நாளைதான் தகனம் செய்யப்படவிருக்கிறது. போலீஸார் இந்தத் தற்கொலை தொடர்பாக இதுவரை படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர்.

மொகமத் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சந்திரகாந்த் ஜாதவ் கூறுகையில், தூக்கில் தொங்கியதால்தான் துனிஷா இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெளிவாகியிருக்கிறது என்று தெரிவித்தார்.

'லவ் ஜிகாத்' - மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ

இந்த நிலையில் மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதம் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில்," கடந்த சில நாள்களுக்கு முன்புதான் துனிஷா சர்மா - சகீன் மொகமத் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். துனிஷாவின் மரணத்துக்கு லவ் ஜிகாத் காரணமாக இருக்கலாம்.

பாஜக எம்.எல்.ஏ ராம் கதம்
பாஜக எம்.எல்.ஏ ராம் கதம்
ட்விட்டர்

துனிஷாவின் குடும்பத்தினருக்கு 100 சதவிகிதம் நீதி கிடைக்க வேண்டும். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன, அதன் பின்னால் லவ் ஜிகாத் இருக்கிறதா என விசாரணை முடிவில்தான் தெரியும். சதிகாரர்கள் யார், சகீன் கான் பின்னால் இருக்கும் அமைப்பு எது எனக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸார் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்" என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.