தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் பகுதி 31-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சித்ரா முரளிதரன். இவர் கணவரின் தம்பி தினேஷ். அண்ணனின் மனைவி கவுன்சிலர் ஆனதிலிருந்து அந்த பகுதியில் தினேஷ் கெத்தாக வலம்வந்திருக்கிறார். இந்நிலையில், பல்லாவரம் சங்கர் நகர்ப் பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதற்கு ரெளடி ஒருவரையும் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியிலிருந்த கடை ஒன்றின் அராஜகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த இடத்துக்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பாக இருவரும் தப்பித்து ஓடிவிட்டார்கள். அந்த கடையில் பதிவான சி.சி.டி.வி கட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய இருவரையும் திருநீறுமலை அருகே சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெளடி மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.