Published:Updated:

போலீஸாரின் கண்ணை உறுத்திய கண்ணாடி; ஏ.சி வசதியுடன் ரகசிய அறை! - பீர் பாரிலிருந்து 17 பெண்கள் மீட்பு

ரகசிய அறையிலிருந்து மீட்கப்படும் பெண்கள்
News
ரகசிய அறையிலிருந்து மீட்கப்படும் பெண்கள்

மும்பையில் ரெய்டின்போது போலீஸாருக்கு பயந்து 17 நடனப் பெண்களை பார் நிர்வாகம் ரகசிய அறையில் 15 மணி நேரம் அடைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பையில் 1990-களில் டான்ஸ் பீர் பார்கள் பிரபலமாக விளங்கின. இந்த டான்ஸ் பார்கள் கிரிமினல்களின் கூடாரமாக விளங்கின. இதையடுத்து மகாராஷ்டிரா அரசு டான்ஸ் பார்களுக்கு தடைவிதித்தது. ஆனாலும் அந்தத் தடையை மீறி மும்பையில் ஆங்காங்கே சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தற்போது பீர் பார்களில் பெண்கள் சப்ளையர்களாகவும், பாடல் பாடுபவர்களாகவும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தி பார் நிர்வாகம் பெண்களை டான்ஸ் ஆடவைக்கிறது. மும்பை அந்தேரியிலுள்ள தீபா பாரில் பெண்கள் சட்டவிரோதமாக நடனமாடவைக்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

ரகசிய அறை
ரகசிய அறை

உடனே இரவு 11:30 மணிக்கு போலீஸார் அந்த பாரில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண்கள் யாரும் பாரில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் போலீஸாருக்கு நம்பத்தகுந்தத் தகவல் கிடைத்திருந்தது. இதனால் பெண்களை மறைத்துவைக்கப் பயன்படும் சமையல் அறை, பாத்ரூம், பொருள்களை வைக்கும் ரூம், அலங்கார அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் பெண்கள் யாரும் அங்கே இல்லை. போலீஸார் பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண்கள் யாரும் இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தனர். ஆனாலும் போலீஸாருக்குச் சந்தேகம் போகவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விடிய விடிய விசாரணை நடத்தினர். காலையில் அலங்கார அறை உட்பட அனைத்து அறைகளிலும் மீண்டும் சோதனை நடத்தினர். அலங்கார அறையில் பிரமாண்ட கண்ணாடி ஒன்று இருந்தது. அதன்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அந்தக் கண்ணாடியை அகற்ற முயன்றபோது முடியவில்லை. இதனால் கண்ணாடியைச் சுத்தியலால் போலீஸார் உடைத்தனர். உள்ளே மிகவும் சிறிய ஸ்விட்ச் ஒன்று இருந்தது. அதை ஆன் செய்தபோது சிறிய கதவு திறந்தது. உள்ளே மிகவும் சிறிய குகை போன்ற ஓர் அறை இருந்தது. அந்த அறைக்குள்ளிருந்து ஈசல்போலப் பெண்கள் ஒவ்வொருவராக வெளியில் வர ஆரம்பித்தனர்.

கைது
கைது

ரகசிய அறைக்குச் செல்ல ரிமோட் கன்ட்ரோல் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரிமோட் கன்ட்ரோல் யாரிடம் இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ரகசிய அறையில் இருந்த 17 பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த ரகசிய அறையில் குளிர்சாதன வசதி, உணவுப்பொருள்கள், காற்றோட்ட வசதி, படுக்கை வசதி போன்றவை இருந்தன. 15 மணி நேரத்துக்குப் பிறகு இந்தப் பெண்கள் ரகசிய அறையில் இருந்து வெளியில் மீட்கப்பட்டனர். பெண்களை உள்ளே அனுப்பினால் அவர்கள் பல மணி நேரம் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பார் மேலாளர் உட்பட மொத்தம் 20 பேர் பிடிபட்டுள்ளனர். பாருக்கு சீல் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.